மியன்மார்-மலேசியா பேச்சு

மியன்மார்-மலேசியா பேச்சு

1 mins read
961e21f9-4613-4acc-a72a-8ccdee4d5b51
-

கோலா­லம்­பூர்: மியன்­மா­ரில் ராணுவ ஆட்­சிக்கு எதி­ரான மறை­முக அர­சாங்­கத்­தின் வெளி­யு­றவு அமைச்­சரை, மலே­சிய வெளி­யு­றவு அமைச்­சர் சைபு­தீன் அப்­துல்லா சந்­தித்தார்.

10 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட ஆசி­யான் குழு­விற்­கும் அமெ­ரிக்­கா­விற்­கும் இடையே வா‌ஷிங்­ட­னில் நடந்த இரண்டு நாள் உச்­சி­நிலை மாநாட்­டிற்குப் பிறகு, அவர்­க­ளின் சந்­திப்பு நடை­பெற்­றது.

இந்த மாநாட்­டிற்கு மியன்­மார் ராணுவ ஆட்­சிக் குழு­விற்கு அழைப்பில்லை.

­சந்­திப்பு குறித்து தமது டுவிட்­டர் பக்­கத்­தில் சைபு­தீன், "மியன்­மா­ரில் அமை­தி­யை­யும் ஜன­நா­ய­கத்­தை­யும் மீண்­டும் நிலை­நாட்­டு­வதற்கு மலே­சியா துணை நிற்­கும்," என்று மியன்மார் அமைச்சரிடம் கூறி­ய­தாக பதி­விட்­டி­ருந்­தார்.

என்­யூஜி எனும் மறை­முக அர­சாங்­கத்­து­டனோ, தீவி­ர­வா­தி­கள் என்று கூறப்­படும் ராணுவ ஆட்சி எதிர்ப்­பா­ளர்­க­ளு­டனோ எந்த நாடும் தொடர்பு வைத்­துக்­கொள்ள வேண்­டாம் என்று ராணுவ ஆட்­சிக் குழு தொடர்ந்து கூறி வரு­கிறது.