கிருமிப் பரவல்: வடகொரியா அவசர நடவடிக்கை

கிருமிப் பரவல்: வடகொரியா அவசர நடவடிக்கை

1 mins read
545382fb-7ef8-4aa1-a1d5-06223dbf6e94
-

சோல்: வடகொரியாவில் கிரு­மித்­தொற்று கார­ண­மாக இது­வரை

42 பேர் மாண்­டு­விட்டனர்.­

உல­கம் முழு­வ­தும் கொள்­ளை­நோய் பர­வத் தொடங்கி கிட்­டத்­தட்ட இரண்­டரை ஆண்­டு­கள் ஆகி­விட்ட நிலை­யில், வட­கொ­ரி­யா­வில் சென்ற வியா­ழக்­கி­ழ­மை­தான் முதல்­மு­றை­யாக கிரு­மிப் பர­வல் உறுதி­ப்படுத்­தப்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து அங்கு நேற்று நான்­கா­வது நாளாக முடக்­க­நிலை நடப்­பில் இருந்­தது.

சென்ற 12ஆம் தேதி முதல் வட­கொ­ரி­யா­வின் அனைத்து நக­ரங்­களும் மாவட்டங்களும் ஒட்­டு­மொத்­த­மாக முடக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தொழிற்­சா­லை­க­ளின் இயக்­கம் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் மக்­கள் வீட்­டிற்­குள்­ளேயே முடங்கி கிடப்­ப­தா­க­வும் கேசி­என்ஏ ஊடகச் செய்தி கூறியது.

தொற்­று­நோ­யைக் கட்­டுப்­ப­டுத்த வட­கொ­ரியா 'விரை­வான அவ­சர நட­வ­டிக்­கை­களை' எடுத்து வரு­வ­தாக அச்­செய்தி குறிப்­பிட்­டது.

ஓமிக்­ரான் கிரு­மிப் பர­வல் குறித்து சரி­யான புரி­தல் இல்­லா­த­தும், அதற்­கான சரி­யான சிகிச்சை முறை பற்­றிய தெளிவு இல்­லா­த­தால் மருந்­து­களை எடுத்­துக்­கொள்­வ­தில் கவ­னக்­கு­றை­வாக இருந்­த­துமே பெரும்­பா­லான உயிர்­இழப்­புக்குக் கார­ணம் என்கிறது

கேசி­என்ஏ செய்தி.

குறைந்­தது 296,180 பேரி­டம் காய்ச்­ச­லுக்­கான அறி­குறி தென்­பட்­ட­தா­க­வும் ஞாயிற்­றுக்­கி­ழமை அன்று மேலும் 15 பேர் மாண்­டு­விட்­ட­தா­க­வும் அது சொன்­னது.

வட­கொ­ரி­யா­வில் ஒட்­டு­மொத்­த­மாக 820,620 பேருக்­குத் தொற்று இருப்­ப­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. 324,550 பேர் இன்­னும் சிகிச்­சை­யில் உள்­ள­னர்.

கிரு­மிப் பர­வலை எதிர்த்துப் போராடி வரு­வ­தாக வட­கொ­ரியா சொன்னாலும் அனைத்துலக அளவிலான தடுப்பூசி திட்டங்களை, அது ஏற்றுக்கொள்வதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.