மஸ்க்கை சந்தித்தார் விடோடோ

மஸ்க்கை சந்தித்தார் விடோடோ

1 mins read
2bb49e25-b8e4-440f-895a-8113ed5e336a
-

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்க்கைச் சந்தித்தார்.

அப்போது இந்தோனீசியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீடுகள், தொழில்நுட்பம் குறித்து விவாதிக்கப்பட்டதாக இந்தோனீசிய அரசாங்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தோனீசியாவின் நிக்கல் எனும் ஒருவகை வெள்ளை உலோகத் தொழிற்துறையில் முதலீடு செய்வது, டெஸ்லா நிறுவனத்தின் மின் வாகனங்களுக்கான மின்கலம் எனும் 'பேட்டரி' உற்பத்தி செய்வது ஆகியவைக் குறித்து ஏற்கெனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.