அமெரிக்காவின் மயாமி நகரில் உள்ள கார்கள் செல்லும் பாலம் ஒன்றில் சென்றுகொண்டிருந்த காரில் சிறிய வகை விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.
அந்த விபத்தில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார், ஐவர் காயம் அடைந்துள்ளனர். விமானத்தில் விமானி உட்பட நால்வர் பயணம் செய்துகொண்டிருந்தனர். விமானம் விழுந்த காரை ஒரு பெண்மணி ஓட்டிக்கொண்டிருந்தார். அவரும் அவருடன் காரில் அவரது இரு கைக்குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர் என்று அறியப்படுகிறது.
செஸ்னா ரக சிறிய விமானம் பாலத்தில் விழுந்து தீப்பிடிக்கும் காணொளி ஒன்று இணையத்தளத்தில் 'வைரல்' ஆகிவிட்டது.

