நியூயார்க் துப்பாக்கிச் சூடு; துப்பாக்கியால் சுட்டவன் ஏற்கெனவே ஒழுங்கற்ற நடத்தைக்காக விசாரிக்கப்பட்டவன்

நியூ­யார்க்: நியூ­யார்க்­கில் பத்து பேர் சுட்­டுக் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­தில் தொடர்­பு­டைய 17 வயது இளை­ஞன் முன்பே ஒழுங்­கற்ற நடத்­தைக்­காக விசா­ரிக்­கப்­பட்­ட­வன் என்ற தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

நியூ­யார்க்­கின் பிங்­ஹாம்­ட­னுக்கு வெளியே உள்ள சஸ்­கி­யூ­ஹான்னா வேலி உயர்­நி­லைப் பள்­ளி­யில் கல்வி ­யாண்­டின் இறு­தி­யில் மாண­வர் ­களின் திட்­டம் பற்றி கருத்­த­றி­யப்­பட்­டது. அப்­போது பேடன் ஜென்ட்­ரன் என்ற மாண­வர், கொலை­யும் தற்­கொ­லை­யும் செய்ய விரும்­பு­வ­தா­கத் தெரி­வித்­தார் என்று நியூ­யார்க் துப்­பாக்­கிச் சூடு சம்­ப­வத்தை விசா­ரித்து வரும் சட்ட அம­லாக்க அதி­கா­ரி­கள் கூறி­னர்.

தாம் நகைச்­சு­வை­யாக அதை கூறி­ய­தாக மாண­வர் தெரி­வித்­தா­லும் அவ­ரி­டம் காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்­தி­னர்.

ஜென்ட்­ரன், ஜூன் 8ஆம் தேதி மன­நல சுகா­தா­ரச் சட்­டத்­தின் கீழ் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­ட­தா­க­வும் ஞாயிறு அன்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

மன­ந­லச் சோத­னைக்­காக மருத்து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட அந்த இளை­ஞன் ஒரு சில நாட்­க­ளுக்­குப் பிறகு விடு­விக்­கப்­பட்­டான். இரண்டு வாரங்­களில் மாண­வர் பட்­ட­ம­ளிப்பு முடிந்­த­தும் விசா­ரணை வளை­யத்­தி­லி­ருந்து அவன் தப்­பி­னான்.

இந்த நிலை­யில் கடந்த சனிக் கிழமை அன்று 320 கிலோ மீட்­டர் பய­ணம் மேற்­கொண்டு நியூ­யார்க்­கில் உள்ள பஃப்ளோ­வுக்கு வந்த ஜென்ட்­ரன், கறுப்­பி­னத்­த­வர்­கள் அதி­கம் வசிக்­கும் இடத்­தில் உள்ள 'டாப்ஸ்' பேரங்­கா­டிக்கு வெளி­யே­யும் உள்­ளே­யும் துப்­பாக்­கி­யால் சுட்­ட­தில் பத்து பேர் கொல்­லப்­பட்­ட­னர். மூவர் படு­கா­யம் அடைந்­த­னர். தனது கழுத்து மீது துப்­பாக்­கியை வைத்து தன்னை மாய்த்­துக் கொள்­ளப் போவ­தாக மிரட்­டிய அவனை காவல்­து­றை­யி­னர் சமா தானப்­ப­டுத்தி கைது செய்­த­னர். அதே நாளில் அவன் மீது கொலை குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

இதற்­கி­டையே நேற்று லாஸ் ஏஞ்­ச­லிஸ் நக­ரில் நடந்த மற்­றொரு துப்­பாக்­கிச் சூட்­டில் ஒரு­வர் கொல்­லப்­பட்­டார். ஐந்து பேர் காயம் அடைந்­த­னர். லகுனா உட்­லண்­சில் உள்ள ஜெனிவா தேவா­ல­யத்­துக்­குச் சென்று கொண்­டிந்­த­வர்­களை நோக்கி துப்­பாக்­கிக்­கா­ரன் சுட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

"காயம் அடைந்­த­வர்­கள் மருத்­து­வ­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். ஒரு­வர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார்," என்று ஆரஞ்சு வட்­டார ஷெரிஃப் அலு­வ­ல­கம் டுவிட்­டர் பதி­வில் தெரி­வித்­தது.

சந்­தேக நபரை தேவா­லய உறுப்­பி­னர்­கள் மடக்­கிப் பிடித்து காவல்­து­றை­யி­டம் ஒப்­ப­டைத்­த­னர். அவர் அறு­பது வயது மதிக்­கத்­தக்க ஆசி­யர் என நம்­பப்­ப­டு­வ­தாக ஷெரிஃப் அலு­வ­ல­கம் குறிப்­பிட்­டது. துப்­பாக்­கிக்­கா­ர­னின் நோக்­கம் தெரி­ய­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!