ஜோகூரில் அழுக்கு உணவகத்தை மூட அதிகாரிகள் உத்தரவு

ஜோகூரில் அழுக்கு உணவகத்தை மூட அதிகாரிகள் உத்தரவு

1 mins read
f08031b3-d479-4805-914c-0932e60e3d2d
-

ஜோகூர் பாரு: ஜோகூரில் செயல்பட்ட அழுக்கான உணவகத்தை மூட அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நச்சு உணவு தொடர்பாக காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பரவியதைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த உணவகத்தை சோதனையிட்டனர். அப்போது உணவகம் அசுத்தமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உணவகத்தில் ெராட்டியைச் சாப்பிட்ட ஒருவர் நச்சு உணவால் பாதிக்கப்பட்டதாகக் கூறி காணொளி வெளியிடப்பட்டிருந்து. விசாரணையில் உணவகத்தின் தூய்மை அதிருப்திகரமாக இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

"நச்சு உணவு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். உணவகத்தைத் தேர்ந்தெடுப்பதில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்," என்று ஜோகூர் பாருவின் சுகாதார, ஒற்றுமைக் குழுவின் தலைவர் லிங் டியன் சூன் தெரிவித்தார்.

சாப்பிடுவதற்கு முன்பு பார்த்து, நுகர்ந்து, சுைவக்கும்," நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வயிற்று வலி, வாந்தி, பேதி போன்ற நச்சு உணவு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறும்படி அவர் கூறியுள்ளார்.