செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8f6f2215-f909-468f-9324-f14f1faaca8d
-

பைடனுக்கு யூன் ஆதரவு

சோல்: தென்கொரிய அதிபர் யூன் சுக இயோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் புதிய வட்டாரப் பொருளியல் குழுவில் தமது அரசாங்கமும் பங்கேற்கும் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். புதிய வட்டாரப் பொருளியல் குழுவை பைடன் விைரவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிலையில் சோல் நகருக்கு வரவிருக்கும் திரு பைடனுக்கு ஆதரவாக அதிபர் யூன் பேசியுள்ளார்.

மின்சாரக் கார்களை

அதிகரிக்கும் நியூசிலாந்து

வெலிங்டன்: பருவநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைவதைத் தடுப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில் நியூசிலாந்தும் தனது பங்கை ஆற்றவிருக்கிறது. மின்சார வாகனங்களை அதிகரிக்கவும் மாற்று எரிபொருளாக ஹைட்ரஜன் பயன்படுத்துவதை ஆய்வு செய்யவும் நியூசிலாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் முதல் திட்டம் நேற்று வெலிங்டனில் வெளியிடப்பட்டது. அடுத்த நான்கு ஆண்டுகளில் பசுமை சார்ந்த திட்டங்களுக்கு 2.9 பில்லியன் நியூசிலாந்து டாலர் நிதியை அந்நாட்டு அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

அம்னோ விதிமுறையில் மாற்றம்

லங்காவி: அம்னோவில் கட்சித் தேர்தலை தாமதப்படுத்து வதற்காக விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமரும் முன்னாள் அம்னோ கட்சியின் முன்னாள் தலைவருமான டாக்டர் மகாதீர் விமர்சித்து உள்ளார்.

"கட்சி உடைவதைத் தடுக்கவும் தேர்தல் தோல்வியைத் தவிர்க்கவும் அம்னோ விதிமுறைகளை மாற்றி யிருக்கிறது.

"தேர்தல் நடந்தால் கட்சி உடைந்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் கட்சித் தேர்தலை தாமதப்படுத்த குறுக்கு வழியை அவர்கள் பின்பற்றி உள்ளனர்," என்று அவர் கூறினார்.

பெஜுவாங் கட்சித் தலைவரான டாக்டர் மகாதீர், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

குறுகிய காலத்திற்கு கட்சித் தேர்தலை ஒத்தி வைத்தால் பரவாயில்லை. ஆனால் பல மாதங்களாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார் மகாதீர்.