ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய், ஜூன் 1ஆம் தேதியிலிருந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆறு மாதங்களாக நீடித்து வரும் கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்த அது தீர்மானித்துள்ளது.
தீவிரக் கட்டுப்பாடுகளால் ஷாங்காயின் பொருளியல் மெதுவடைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஷாங்காய் நகரம் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும் என்று அதன் துணை மேயர் ஸோங் மிங் தெரிவித்தார்.
கட்டுப்பாடுகுளைத் தளர்த்து வதற்கு முன்பு கிருமிப் பரவலைத் தடுக்க தற்போதைய கட்டுப்பாடுகள் மே 21ஆம் ேததிவரை நீடிக்கும் என்றார் அவர்.
"கிருமிப் பரவல் ஆபத்து குறையும் வரை ஜூன் 1ஆம் ேததியிலிருந்து பிற்பகுதி வரையில் தொற்று நோய் தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலில் இருக்கும். அேத சமயத்தில் நிர்வாகத்தை சீராக்குவோம், நகரத்தின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்போம்," என்று துணை மேயர் மேலும் கூறினார். ஆனால் மேயரின் அறிவிப்பை ஷாங்காய் மக்கள் நம்பவில்லை.
இதற்கு முன்பு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக கால அட்டவணை அறிவிக்கப்பட்டு பின்னர் அடிக்கடி மாற்றப்பட்டது. இதனால் மக்கள் ஏமாற்றம்அடைந்துள்ளனர்.
"ஷாங்காயே இன்னமும் நம்ப வேண்டுமா," என்று குடியிருப்பாளர் ஒருவர் 'வெய்போ' சமூக ஊடகத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஷாங்காய் முழுமையாக முடக்கப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக இருப்பதால் சில்லறை விற்பனை, தொழில்துறை உற்பத்தி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது காலாண்டில் பொருளியல் குறையலாம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கிருமிப் பரவல் இருந்தாலும் உலகின் பல நாடுகளில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படுகின்றன.
ஆனால் ஷாங்காயில் கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. சீனா, கிருமித் தொற்றை முழுமையாக ஒழிக்க கடப்பாடு கொண்டிருப்பது அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால் ஷாங்காய் முடக்கப் பட்டுள்ளதால் உலக நாடுகளுக்கான விநியோகச் சங்கிலியும் பொருளியலும் பாதிக்கப்பட்டு உள்ளன.

