தோக்கியோ: இம்மாதம் முதல் சிங்கப்பூர் உட்பட நான்கு நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளை ஜப்பான் அனுமதிக்க உள்ளது.
ஜப்பானுக்குச் சுற்றுலாச் செல்ல விரும்புவோர் திட்டமிடப்பட்ட பயண அட்டவணையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் மூன்று தடுப்பூசிகள் போட்டவர்களாக இருக்கவேண்டும் என்றும் சொந்த மருத்துவ காப்புறுதிகளை வைத்திருக்க வேண்டும் என்றும் ஜப்பான் சுற்றுப்பயணத்துறை முகவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுப்பயணிகள் அனுமதிக்கப்படுவர். சோதனை அடிப்படையில் குறிப்பிட்ட அளவு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நிலைமை கண்காணிக்கப்பட்டு பிறகு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

