தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டி

வாள்வீச்சில் இரட்டை தங்கம்

ஹனோய்: தென்கிழக்காசிய விளையாட்டின் வாள்வீச்சுப் போட்டியில் சிங்கப்பூர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. வாள்வீச்சு போட்டியின் 'ஃபாயில்' பிரிவில் பிலிப்பீன்ஸ் குழுவை வீழ்த்தி சிங்கப்பூர் பெண்கள் தங்கப் பதக்கத்தைத் தக்க வைத்துக்கொண்டனர். அதன் பிறகு நடந்த அதே போட்டியின் 'எப்பி' பிரிவில் சிங்கப்பூர் ஆண்கள் குழு முதல்முறையாக தங்கம் வென்றது. இவர்கள் நடப்பு வெற்றியாளரும் போட்டியை ஏற்று நடத்தும் வியட்னாம் குழுவை 37-36 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றனர்.

உருட்டுப்பந்து: சிங்கப்பூர் மகளிர் குழு தங்கம் வென்றது

உருட்டுப்பந்துப் போட்டியில் 1995ஆம் ஆண்டிற்குப் பிறகு மகளிர் இரட்டையர் பிரிவில் முதல்முறையாக சிங்கப்பூரின் நியூ ஹுய் ஃபென், செரி டான் இணை தங்கப் பதக்கம் வென்றது. தொடக்கம் முதல் இறுதி வரை முன்னிலை வகித்த இந்த இணை 2,767 புள்ளிகளைப் பெற்றது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஜாரிஸ் கோ, திமத்தி தாம் ஆகியோர் 2,592 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றனர். சிங்கப்பூரின் மற்றொரு இணையான சே ரே ஹான், டேரன் வோங் ஆகியோர் 2,551 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றனர். தங்கம் வென்ற இந்தோனீசியா 2,642 புள்ளிகளைப் பெற்றது.

நீச்சலில் மூன்றாவது தங்கம் வென்ற சிங்கப்பூர் மங்கை

பெண்களுக்கான 400 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் தங்கம் வென்ற கான் சிங் ஹிவீ (இடது). படம்: சாவ்பாவ்

பெண்களுக்கான 400 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் ​போட்டியில் பந்தய தூரத்தை 4 நிமிடம் 14.16 வினாடிகளில் கடந்த சிங்கப்பூரின் கான் சிங் ஹிவீ தங்கப் பதக்கம் வென்றார். 1995ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்பிரிவில் சிங்கப்பூரின் முதல் தங்கம் இதுவாகும்.

18 வயது கான் சிங் ஹிவீ இவ்வாண்டு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் வென்றுள்ள மூன்றாவது தங்கம் இது. அவர், ஏற்கெனவே 200, 800 மீட்டர் எதேச்சை பாணி பிரிவுகளிலும் தங்கம் வென்றுள்ளார்.

ஆண்களுக்கான 50 மீட்டர் 'மல்லாந்து' நீந்தும் பிரிவில் சிங்கப்பூரின் குவா ஜெங் வென் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 25.83 வினாடிகளில் முடித்தார்.

ஆண்களுக்கான 200 மீட்டர் நெஞ்சுநீச்சலில் சிங்கப்பூரின் மேக்ஸ்மில்லியன் ஆங் பந்தய தூரத்தை

2 நிமிடம் 11.93 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!