கியவ்: மரியபோல் எஃகு ஆலையில் சிக்கியிருந்த 265 உக்ரேனிய படை வீரர்கள் சரணடைந்ததாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
மருத்துவ உதவி தேவைப்படும் நிலையில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக நோவொஜோஸ்க் நகர மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அது சொன்னது.
அனைத்துலக விதிகளுக்கு ஏற்பவும் அவர்கள் நடத்தப்படுவார்கள் என்று ரஷ்யா சொன்னது.
காயமடைந்த 53 பேர் உட்பட 264 உக்ரேனிய வீரர்கள் ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உக்ரேனிய தற்காப்பு அமைச்சும் உறுதிப்படுத்தியது.
அவர்களுக்குப் பதில் ரஷ்ய வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்று உக்ரேனிய தற்காப்பு அமைச்சர் சொன்னார்.
600 பேர் ஆலைக்குள் சிக்கியிருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், எஞ்சியவர்களை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உக்ரேன் சொன்னது.
ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும் இது உக்ரேன் தரப்புக்கு குறிப்பிடத்தக்க தோல்வி என்று கூறப்படுகிறது.
துருக்கி மறுப்பு
சுவீடனும் ஃபின்லாந்தும் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கவுள்ளதாக கூறியுள்ளன.
ஆனால், அந்நாடுகளின் தீவிரவாத அமைப்புகளைக் கார ணம் காட்டி, துருக்கி அதிபர் எர்டோகன் அவை நேட்டோவில் சேர எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

