‌ஷாங்காயில் சமூக அளவில் கிருமித்தொற்று இல்லை

‌ஷாங்காயில் சமூக அளவில் கிருமித்தொற்று இல்லை

1 mins read
b88513fc-c7cb-48ce-9db1-1631c264ebe5
-

‌ஷாங்காய்: ‌தொடர்ந்து மூன்றாவது நாளாக சமூக அளவில் கிருமிப் பரவல் இல்லை என்ற முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக ‌ஷாங்காய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஏழு வார முடக்கநிலை தளர்த்தப்பட்டு, மக்கள் வெளியே சென்று வர அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ‌ஷாங்காய் மக்கள் பலருக்கு தனிமைப்படுத்தல் உத்தரவு மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்படுவதால், தளர்வுகள் எவ்வளவு விரைவில் கொண்டு வரப்படும் என்பது சந்தேகத்திற்குரியதாகியுள்ளது.

இம்மாதம் 21ஆம் தேதி வரை பெரும்பாலான கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் என்றாலும் சில்லறை வர்த்தகக் கடைகள், மருந்தகங்கள் இந்த வாரம் திறக்கப்படுகின்றன.

சில பகுதிகளில், மக்கள் வெளியே நடமாடியதைப் பார்க்க முடிந்ததாக செய்திகள் கூறுகின்றன. படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, ஜூன் மாதத்திற்குள் முடக்கநிலை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அடிக்கடி கிருமித்தொற்று பரிசோதனை செய்துகொள்ளும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.