ஹைப்பர்சோனிக் ஏவுகணை: அமெரிக்கா வெற்றிகர சோதனை

ஹைப்பர்சோனிக் ஏவுகணை: அமெரிக்கா வெற்றிகர சோதனை

1 mins read
292b4e97-bc07-472c-afb4-c952fe66de5d
-

வா‌ஷிங்டன்: ஒலியைவிட 5 மடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று தெற்கு கலிஃபோர்னியா கடற்பகுதியில், பி-52 பாம்பர் ரக விமானத்தில் இருந்து அந்த ஏவுகணை சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்திலிருந்து அதனை ஏவியதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி அதன் பூஸ்டர் இயங்கி, ஒலியைவிட ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் பாய்ந்து சென்றதாக விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

அதிவேகமாக சென்று இலக்கை தாக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தங்களுக்கு முன்பு, ரஷ்யாவும் சீனாவும் பரிசோதித்துள்ளதை அமெரிக்கா சுட்டிகாட்டியது.