சரணடைந்தவர்கள் பற்றி கவலை

சரணடைந்தவர்கள் பற்றி கவலை

2 mins read
68b0c20e-ba6a-4459-9c80-e98b9d6341d4
கிழக்கு உக்ரேனில் நடந்த போரில் கொல்லப்பட்ட அந்நாட்டின் தாராஸ் ஷெவ்சென்கோ தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் தேசிய சேவையாளருமான டெனிஸ் அன்டிபோவின் இறுதிச்சடங்கின்போது உறவினர்கள், நண்பர்கள் அவருக்கு மரியாதை செய்தனர். படம்: இபிஏ -

மரி­ய­போல்: ர‌ஷ்­யா­வி­டம் சர­ண­டைந்த உக்­ரே­னிய வீரர்­க­ளின் நலன் குறித்து தற்­போது கவலை எழுந்­துள்­ளது. வீரர்­களை ஒப்­ப­டைப்­பது குறித்து எந்த சம­ர­சமோ, ஒப்­பந்­தமோ மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்று ர‌ஷ்யா கூறி­யதே கவ­லைக்­குக் கார­ண­மா­கும்.

மரி­ய­போல் எஃகு ஆலை­யில் சிக்­கிக்­கொண்ட உக்­ரே­னிய வீரர்­கள் பல வாரங்­க­ளுக்­குப் பிறகு சென்ற திங்­கட்­கி­ழமை முதல் சர­ண­டை­யத் தொடங்­கி­னர்.

அப்­போது முதல் 959 வீரர்­கள் ர‌ஷ்­யா­வி­டம் சர­ண­டைந்­த­தா­க­வும் அவர்­கள் ர‌ஷ்­யக் கட்­டுப்­பாட்­டில் உள்ள ஒலே­நிவ்கா நக­ரத்­திற்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தாகவும் ர‌‌ஷ்ய உள­வுப் பிரிவு சொன்­னது.

அவர்­களில் பெண்­கள் சிலர் உள்­ளதை ராய்ட்­டர்ஸ் காணொளி ஒன்று காட்­டி­யது. இன்­னும் எத்­தனை பேர் ஆலைக்­குள் சிக்­கி­யி­ருக்­கி­றார்­கள் என்ற விவ­ரம் தெரி­ய­வில்லை.

ர‌ஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் அளித்த உத்­த­ர­வா­தத்­தின்­படி அனைத்­து­லக விதி­க­ளுக்கு ஏற்ப, உக்­ரே­னிய வீரர்­கள் நடத்­தப்­ப­டு­வார்கள் என்று ர‌ஷ்யா கூறு­கிறது.

ஐநா­வுக்­கான ரஷ்ய துணைத் தூதர் டிமிட்ரி பாலி­யன்ஸ்கி, இந்த வி‌ஷ­யத்­தில் எந்த ஒப்­பந்­த­மும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்று டுவீட் செய்­துள்­ளார். அதில், "அசோவ்ஸ்­டால் எஃகு ஆலை­யில் இருந்த உக்­ரேன் வீரர்­கள் எந்­த­வொரு நிபந்­த­னை­யும் இன்றி சர­ண­டைந்­துள்­ள­னர்," என்று அவர் பதி­விட்­டுள்­ளார்.

ர‌ஷ்யா கூறிவரும் 'உக்ரேனிய ஆட்சிக் குற்றங்கள்' குறித்து சரணடைந்தவர்களிடம் விசாரிக்க ர‌ஷ்யா திட்டமிட்டுள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

உக்ரேன் மீதான படையெடுப்பில் மரியபோலில் உக்ரேன் வீரர்கள் சரணடைந்தது ர‌ஷ்யாவிற்கு பெரும் வெற்றியாக கருதப்படுகிறது. அதே வேளையில், டோன்பாசை முழுமையாக கைப்பற்றத் துடிக்கும் ர‌ஷ்ய வீரர்கள் விரட்டியடிக்கப்படு வதாக உக்ரேன் கூறுகிறது.

இதற்கிடையே, சுவீடனும் ஃபின்லாந்தும் நேட்டோ கூட்ட மைப்பில் இணைவதற்கு நேற்று அதிகாரபூர்வமாக விண்ணப்பித் தன.

உக்ரேன் வீரர்கள் நிபந்தனை எதுவுமின்றி சரணடைந்ததாக சொல்கிறது ர‌ஷ்யா