கொழும்பு காலிமுகத் திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது

கொழும்பு காலிமுகத் திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது

2 mins read
ca919282-f9c3-427e-8001-4a12ff83a47d
13ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று இலங்கையில் அனுசரிக்கப்பட்டது. படம்: பிபிசி -

கொழும்பு: இலங்­கை­யில் தற்­போது நில­வும் பொரு­ளா­தார நெருக்­க­டி­மிக்க சூழ­லில், நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் அனு­சரிக்­கப்­பட்­டன.

கடந்த காலங்­களில் இத்­த­கைய முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் பொது­வாக தமி­ழர்­கள் பெரும்­பான்­மை­யாக வாழும் இலங்கை வட­கி­ழக்­கில் மட்­டுமே நடத்­தப்­படும்.

அதோடு நினை­வேந்­தல் நிகழ்­வு­க­ளுக்கு அர­சாங்­கத்­தின் தீவிர எதிர்ப்­பும் இருக்­கும். இந்த ஆண்டு அத்­த­கைய எதிர்ப்­பு­கள் ஏது­மில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

குறிப்­பாக, அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்­சே­வின் அதி­பர் செய­ல­கம் அரு­கி­லேயே இந்த ஆண்டு முள்ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வு நடத்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கி

றது.

இலங்­கை­யில் நில­வும் கடும் பொரு­ளா­தாரச் சிக்­க­லைத் தொடர்ந்து வெடித்த போராட்­டங்­களால் பிர­த­மர் மகிந்த ராஜ­பக்சே பதவி விலக நேரிட்­டது.

அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்­சே­வும் பதவி வில­கக் கோரி காலி­மு­கத் திட­லில் மக்­கள் தொடர்ந்து ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், காலி­மு­கத்­தி­ட­லி­லேயே நேற்று முள்­ளி­வாய்க்­கால் நினைவு ஸ்தூபி அமைக்­கப்­பட்டு தமி­ழர்­களும் சிங்­க­ளர்­களும் இணைந்து அஞ்­சலி செலுத்­தி­ய­தாக பிபிசி தமிழ்ச் செய்தி கூறு­கிறது.

இத­னி­டையே முள்­ளி­வாய்க்­காலில் இறு­திப் போர் நடந்த இடத்­தில் மக்­கள் நினை­வேந்­தல் நடத்த கூடி­யி­ருந்தார்கள்.

வழக்­க­மாக தடுப்­ப­து­போல இந்த முறை ராணு­வத்­தி­னர் இந்த நிகழ்­வைத் தடுக்­க­வில்லை.

தமி­ழர்­கள் பெரும்­பான்­மை­யாக வாழும் வடகிழக்குப் பகு­தியைத் தனி நாடாக ஆக்க வேண்­டும் என்ற கோரிக்­கை­யோடு போரா­டிய தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளுக்­கும் இலங்கை ராணு­வத்­துக்­கும் இடை­யில் 30 ஆண்­டு­க­ளாக உள்­நாட்­டுப் போர் நடந்­து­வந்­தது.

இதன் கடைசிக் கட்­டப் போர், முள்­ளி­வாய்க்­கால் பகு­தி­யில் 2009ஆம் ஆண்டு மே 17-18 ஆகிய தேதி­களில் நடந்­தது.

அப்­போது, சிறு பகு­தி­யில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமி­ழர்­களும் விடு­த­லைப் புலி­களும் சிக்­கிக்­கொண்­ட­னர்.

இவர்­க­ளைச் சுற்றி வளைத்த இலங்கை ராணு­வம் கொடூ­ர­மான தாக்­கு­த­லில் பல்­லாயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­க­ளைக் கொன்­ற­தாக குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­னது.