திருடப்பட்ட 22.5 மில்லியன் மலேசியர்களின் தகவல்கள் 10,000 டாலருக்கு விற்கப்பட்டது

திருடப்பட்ட 22.5 மில்லியன் மலேசியர்களின் தகவல்கள் 10,000 டாலருக்கு விற்கப்பட்டது

2 mins read
6dc78710-48ce-44b8-a93a-98b4891d7640
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் தேசிய பதி­வுத் துறை­யின் தக­வல்­கள் கசிந்­து­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

1940ஆம் ஆண்­டுக்­கும் 2004ஆம் ஆண்­டுக்­கும் இடை­யில் பிறந்த 22.5 மில்­லி­யன் மலே­சி­யர்­க­ளின் தக­வல்­கள் வேண்­டு­மென்றே திரு­டப்­பட்­டு­விட்­ட­தாக தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன,

மொத்­தம் 160 ஜிபி அள­வுக்­குச் சேமிக்­கப்­பட்டு இருக்­கும் அந்­தத் தக­வல்­கள் இணை­யத்­தின் ரக­சி­யத் தளத்­தில் US$10,000 (S$13,846) விலைக்கு விற்­கப்­பட்டு வரு­வ­தாக அமான்ஸ் என்ற உள்­நாட்டு தொழில்­நுட்ப இணை­யக் களஞ்­சி­யம் தெரி­விக்­கிறது.

மலே­சி­யா­வில் சென்ற ஆண்டு செப்­டம்­ப­ரில் இது­போல பல தக­வல்­களும் விற்­கப்­பட்­ட­தாக தக­வல்­கள் வெளி­யா­யின.

அந்த இரண்டு சம்­ப­வங்­க­ளி­லுமே 'மை ஐடென்­டிட்டி செயலி மூலம் தேசிய பதி­வுத்­ து­றை­யி­டம் இருந்து தக­வல்­கள் திரு­டப்­பட்டு இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

'மை ஐடென்­டிட்டி' என்­பது பல்­வேறு அர­சாங்க அமைப்­பு­கள் பயன்­ப­டுத்­தும் பொது­வான மையப்­படுத்­தப்­பட்ட தக­வல் பகிர்வு தள­மா­கும்.

இது­பற்றி கருத்து தெரி­வித்த உள்­துறை அமைச்­சர் ஹம்சா சைநூ­தீன் தேசி­யப் பதி­வுத் துறை­யில் எந்த ஊடு­ரு­வ­லும் இடம் பெற­வில்லை என்று மறுத்­து­விட்­டார்.

ஆனால், தக­வல் பதி­வுத்­து­றை­யின் தக­வல்­க­ளைப் பெறு­வ­தற்­குப் பல்­வேறு அமைப்­பு­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

சென்ற செப்­டம்­பர் மாதம் நடந்த இதே­போன்ற தக­வல் திருட்­டின்­போது, அது தேசிய பதி­வுத் துறை­யில் இருந்து கசி­ய­வில்லை என்­பதைத் தங்­க­ளால் நிரூ­பிக்க முடிந்­ததை அவர் குறிப்­பிட்­டார். அப்போது, 1979-1998ஆம் ஆண்­டுக்­கும் இடை­யில் பிறந்­த­வர்­க­ளின் தக­வல்­கள் திருடப்பட்டன.

தேசிய பதிவுத் துறை தகவல்­கள் வலு­வான பாது­காப்பு உள்­ளவை. எனவே, யாரும் கவ­லைப்­பட வேண்­டாம் என்­றார் அவர்.

கடு­மை­யான பாது­காப்பு நட­வடிக்­கை­களை நடைமுறைப்­படுத்­தும்­படி 'மை ஐடென்­டிட்டி' தக­வல் பகிர்­வுத் தளத்­தைப் பயன்­ப­டுத்­து­வோ­ருக்கு அறி­வு­றுத்­தப்­பட்­ட­தா­க­வும் அமைச்­சர் கூறி­னார்.

இது பற்றி கருத்துத் தெரி­வித்த ஃபூங் செங் லியோங் என்ற வழக்­க­றி­ஞர், மலே­சி­யா­வில் தக­வல் கசிவு தொடர்­பான புலன்­வி­சா­ர­ணை­கள் வெளிப்­படை­யாக இல்லை என்­றும் இது எரிச்­ச­லாக இருக்­கிறது என்­றும் தெரி­வித்­தார்.

தனிப்­பட்­டோர் தக­வல் பாது­காப்­புத் துறை­யும் மலே­சிய இணை­யப் பாது­காப்பு அமைப்­பும் இது­பற்றி கருத்து தெரி­விக்க மறுத்­து­விட்­டன. தேசிய பதி­வுத் துறை­யும் எது­வும் கூற­வில்லை.