அதிபர் தேர்தல்: இந்தோனீசியாவில் புதிய கூட்டணி

அதிபர் தேர்தல்: இந்தோனீசியாவில் புதிய கூட்டணி

1 mins read
89a6a6a5-75fd-4db9-85e3-278b4a6924a4
-
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கோல்கர் கட்சி இரண்டு சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவரை எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கும் பொருட்டு இந்த கூட்டணி அமைக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

எனவே, சென்ற இரண்டு தேர்தல்களைப் போல் இல்லாமல், வரும் 2024ல் நடைபெறவுள்ள தேர்தல் களத்தில் இரண்டு அதிபர் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பிஏஎன் எனும் தேசிய மேன்டேட் கட்சியுடனும் பிபிபி எனும் தேசிய மேம்பாட்டு கட்சியுடனும் கோல்கர் கட்சி ஏற்படுத்தியுள்ள இந்தக் கூட்டணிக்கு 'ஒன்றுபட்ட இந்தோனீசிய கூட்டணி' என்று பெயரிடப்பட்டுள்ளது.