பெய்ஜிங்: கிருமிப் பரவல் முதல் முறையாக தலைதூக்கியுள்ள வடகொரியாவை ஒட்டியுள்ள சீன நகரத்தில் முன்கூட்டியே பரிசோதனையை தொடங்கியுள்ளது சீனா.
வடகொரியாவில் சென்ற வாரம் தொற்று கண்டறியப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட 1.7 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இருப்பினும், வடகொரியாவில் இருந்து 300 கி.மீ. தூரத்தில் உள்ள டாலியன் நகரத்திலும் தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து, அந்நகர மக்கள் நேற்று முதல் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தியஜென் நகரத்தில் சுரங்க நிலையங்கள் மூடப்பட்டன. பெய்ஜிங்கில் இன்னும் கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன. ஷாங்காயில் தொற்றுச் சம்பவங்கள் குறைந்து வருகின்றன.

