அமெரிக்க போர் விமானி ஒருவர் யுஎஃப்ஒ எனப்படும் அடையாளமற்ற பறக்கும் பொருட்களின் காணொளி ஒன்றை இணயைத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தென் சீனக் கடலில் தமது வழக்கமான விமான பயிற்சியை மேற்கொண்டபோது அவர் அந்த வினோத காட்சியைக் கண்டார்.
53 வினாடி நீளமான இந்தக் காணொளி சென்றாண்டு டிசம்பர் மாதம் அடையாளமற்ற பறக்கும் பொருட்களைத் தேடி கண்டுபிடிக்கும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
காணொளியில் பதிவுசெய்யப்பட்ட காட்சிகள் மிகவும் யதார்த்தமாகவும் தெளிவாகவும் இருப்பதால், இந்தக் காணொளி இப்போதுதான் பரவலாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டு வருகிறது.
தென் சீனக் கடல் மேல் சுமார் 12,000 மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, மேகங்கள் நடுவே பத்துக்கும் மேற்பட்ட விளக்குகள் மின்னும் காட்சி தொன்றியது.
இதுபோன்ற விளக்குகள் மற்ற விமானங்களிலோ வானூர்திகளிலோ பொருத்தப்படுவதில்லை. விளக்குகள் ஒருங்கிணைந்தார்போல் ஒரே நேரத்தில் மின்னுவதும் அணைவதுமாக காட்சியளித்தன.
சிறிது நேரத்தில் விளக்குகள் மாயமாய் அணைந்தன.
பல காலமாக இதுபோன்ற காணொளிகள் அதிகாரிகள், விமான நிபுணர்கள், பொதுமக்கள் ஆகியோரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.
இதுபோன்ற அடையாளமற்ற பறக்கும் பொருட்கள் வேற்றுகிரகத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்பது சிலருடைய கருத்து.

