கனடா, அமெரிக்காவில் குரங்கம்மை தொற்றால் பலர் பாதிப்பு

கியூ­பெக்: கன­டா­வில் 13 பேருக்­குக் குரங்­கம்மை தொற்­றி­யி­ருப்­ப­தாக அந்நாட்டு அதி­கா­ரி­கள் தெரி­வித்­து உள்­ள­னர்.

அண்டை நாடான அமெ­ரிக்­கா­விலிருந்து கன­டா­வுக்­குச் சென்ற ஒரு­வரை அம்மை தொற்­றி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­குக் காய்ச்சல், உடல்­வலி, வீங்­கிய நிண­நீர்ச் சுரப்­பி­கள் ஆகிய அறி­கு­றி­கள் முத­லில் தென்­படும். பின்­னர் சின்னம்மை உடல், முகம் முழு­வ­தும் பரவு­கிறது.

கன­டா­வின் கியூ­பெக் நக­ரில் 13 பேரைக் குரங்­கம்மை தொற்­றி­யி­ருப்­பது தெரி­ய­வந்­தது. இத­னைத் தொடர்ந்து, அதி­கா­ரி­கள் அதன் பர­வல் குறித்து விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

அமெ­ரிக்­கா­வின் மாச­சூ­செட்ஸ் மாநி­லத்­தில் குரங்­கம்­மை­யால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வர் மருத்­து­வ­மனை­யில் குண­ம­டைந்து வரு­வ­தாக அந்­நாட்டு நோய் கட்­டுப்­பாட்டு மையம் சொன்­னது. அவ­ரால் பொது­மக்­க­ளுக்கு அபா­யம் இல்லை என்­றும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இந்­நி­லை­யில் பிரிட்­டன், ஸ்பெயின், போர்ச்­சு­கல் போன்ற ஐரோப்­பிய நாடு­க­ளி­லும் குரங்­கம்மை பரவி வரு­கிறது.

பிரிட்­ட­னில் இது­வரை ஒன்­பது பேரி­டம் அது கண்­டு­பி­டிக்­கப்­பட்டு உள்ளது. ஸ்பெ­யி­னில் 23 பேரும் போர்ச்­சு­க­லில் நான்கு பேரும் இது­வரை குரங்­கம்­மை­யால் பாதிக்­கப்­பட்­டு இ­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்பு, இந்­நா­டு­களில் குரங்­கம்மை பதி­வா­க­வில்லை.

பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் உடல் திர­வங்­கள் அல்­லது புண்­ணு­டன் தொடர்­பில் இருக்கும் துணி, படுக்கை போன்­ற­வற்றை மற்­றொ­ரு­வர் தொடும்­போது கிருமி பர­வு­கிறது. வீட்­டைச் சுத்­தப்­ப­டுத்­தும் கிருமி நாசி­னி­யைப் பயன்­ப­டுத்தி கிருமியை எளி­தில் அழிக்­க­லாம் என அதி­கா­ரி­கள் அறி­வு­றுத்­தி­னர்.

பெரும்­பா­லும் பாலி­யல் உறவு மூலம் அம்மை பர­வு­வ­தா­கக் கூறப்­பட்­டது. குறிப்­பாக ஓரி­னச் சேர்க்­கை­யா­ளர்­க­ளி­டையே இந்­நோய் அதி­க­மா­கப் பர­வு­வ­தாக ஆய்­வாளர்­கள் கூறு­கின்­ற­னர்.

பொது­வாக மேற்கு, மத்­திய ஆப்பிரிக்­கா­வில் ஏற்­படும் நோயான இது ஐரோப்பா மற்­றும் அமெ­ரிக்­காவில் பரவலாக பரவி வரு­வது குறித்து மேலும் ஆராய்ச்சி நடத்த உலக சுகா­தார நிறு­வ­னம் உத்­த­ர­விட்­டு உள்­ளது.

கொவிட்-19 பய­ணக் கட்­டுப்­பாடுகள் தளர்த்­தப்­பட்­டுள்­ள­தைத் தொடர்ந்து அதி­க­மா­னோர் பயணம் மேற்­கொள்­ளும் நிலை­யில், ஆப்பிரிக்­கா­வி­லி­ருந்து மற்ற நாடு­களுக்கு குரங்­கம்மை பர­வு­வ­தாக நம்­பப்­ப­டு­கிறது.

குரங்­கம்மை முதன்முத­லில் 1958ல் குரங்கு­க­ளி­டம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!