அம்பு எய்தல்: ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூருக்கு தங்கம்

ஹனோய்: அம்பு எய்­தல் போட்­டி­யில் கிட்­டத்­தட்ட ஒன்­பது ஆண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு சிங்­கப்­பூர் வீராங்­கனை ஒரு­வர் தங்­கம் வென்றுள்­ளார். வியட்­னா­மில் நடை­பெற்­று­வ­ரும் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் சிங்­கப்­பூ­ரின் 39வது தங்­கப் பதக்­கத்தை கொண்­டெசா லோ, 27, வென்­றார். மக­ளி­ருக்­கான தனி­ந­பர் இறு­திச்­சுற்­றில் வியட்­னா­மைச் சேர்ந்த புவோங் தாவ் லியை 144-140 எனும் புள்­ளிக் கணக்­கில் லோ நேற்று வென்­றார்.

2013ல் நடை­பெற்ற தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் கடை­சி­யாக சிங்­கப்­பூர் தங்­கம் வென்­றி­ருந்­தது.

இந்­நி­லை­யில், அம்பு எய்­தல் போட்­டி­யில் மற்­றொரு சிங்­கப்­பூர் வீரர் வெண்­க­லப் பதக்­கம் வென்­றார். வியட்­னா­மின் நுவென் தி ஹாய் சாவுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் 146-140 எனும் புள்­ளிக் கணக்­கில் மெட­லின் ஓங் வென்­றார்.

கடை­சி­யாக 2019ல் நடை­பெற்ற தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் அம்பு எய்­தல் விளை­யாட்­டில் சிங்­கப்­பூர் பதக்­கம் எதை­யும் வெல்­ல­வில்லை. 2017 போட்டி­களில் அது வெள்­ளிப் பதக்­கம் ஒன்றை வென்­றி­ருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!