ஹனோய்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரின் படகோட்டக் குழு ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, அந்த விளையாட்டில் சிங்கப்பூர் அதன் இரண்டாவது தங்கப் பதக்கத்தையும் நேற்று வென்றது.
ஆடவர்களுக்கான 1,000 மீட்டர் இறுதிச்சுற்றில், ஆறு குழுக்களில் மிக வேகமாக வந்தனர் லுக்காஸ் டியோ-பிரையன் வீ இணை. அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் 3 நிமிடம், 40.779 வினாடிகள்.
இந்தோனீசியா இரண்டாம் இடத்திலும் மியன்மார் மூன்றாம் இடத்திலும் வந்தன.

