மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிவு

மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிவு

1 mins read
cfa234a6-4702-4dc0-9d09-e2faebbababd
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்க டால­ருக்கு நிகரான மலே­சிய ரிங்­கிட்­டின் மதிப்பு, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்­துக்­குப் பிறகு ஆகக் குறை­வாக உள்­ளது. அமெ­ரிக்க மத்­திய வங்கி அதன் நாண­யக் கொள்­கை­யைக் கடு­மை­யாக்க உறு­தி­யான நிலைப்­பாட்­டைக் கொண்­டி­ருப்­பதே இதற்­குக் கார­ணம்.

நேற்று காலை 9 மணி நில­வ­ரப்­படி, ஒரு அமெ­ரிக்க டால­ருக்கு நிகரான ரிங்­கிட்­டின் மதிப்பு 4.4ஆக இருந்­தது. கடை­சி­யாக 2020 மார்ச் 23ஆம் தேதி ரிங்­கிட்­டின் மதிப்பு ஆகக் குறை­வாக பதி­வா­கி­யி­ருந்­தது. அப்­போது ஒரு டால­ருக்கு நிகரான ரிங்­கிட்­டின் மதிப்பு 4.447ஆக இருந்­தது.