ர‌ஷ்யாவின் தீவிர தாக்குதலில் உருக்குலைந்த டோன்பாஸ்

கியவ்: பீரங்கி, ஏவு­கணை தாக்­கு­தல்­கள், விமா­னங்­கள் மூலம் குண்­டு­வீச்சு என உக்­ரே­னின் கிழக்­கில் உள்ள டோன்­பாஸ் வட்­டா­ரத்­தில், ர‌ஷ்யா தனது தாக்­கு­த­லைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக உக்­ரேன் ராணு­வம் தெரி­வித்­துள்­ளது.

டோன்­பா­சில் உள்ள லுஹான்ஸ்க் பகு­தி­யில், ரஷ்யா நடத்­திய தாக்­கு­த­லில் 13 பொது­மக்­கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக அதன் ஆளு­நர் செர்ஹி கெய்­டாய் தெரி­வித்­தார்.

செவெ­ரோ­டோ­னெட்ஸ்க் நக­ரில் ரஷ்­யா­வின் தாக்­கு­தல் முறி­ய­டிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் 12 பேர் கொல்லப்­பட்­ட­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

தொழில் நக­ர­மான டோன்­பாஸை ர‌ஷ்­யப் படை­கள் முற்­றி­லும் அழித்­து­விட்­ட­தாக உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்கி சொன்­னார்.

தம்­மால் இயன்ற அள­வுக்கு உக்­ரே­னின் கட்­ட­மைப்­பு­க­ளைச் சேதப்­ப­டுத்­த­வும் உக்­ரேன் மக்­க­ளைக் கொல்­ல­வும் ர‌ஷ்­யப் படை­கள் முயல்­வ­தா­க­வும் அவர் சொன்­னார். ர‌ஷ்ய இனப்­ப­டு­கொ­லையை அரங்­கேற்­று­வ­தாக அவர் மீண்­டும் சொன்­னார்.

“ர‌ஷ்யா எங்­க­ளுக்கு மேலும் அழுத்­தம் கொடுக்க முயல்­கிறது.

“டோன்­பாஸ் நக­ரம் நர­க­மாக காட்­சி­ய­ளிக்­கிறது.

“மத்­திய உக்­ரே­னின் ஒடேசா பகு­தி­யி­லும் ர‌ஷ்யா தொடர் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கிறது,” என்­றார் அவர்.

இந்­நி­லை­யில், டோன்­பாஸ் வட்­டா­ரத்­தின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகு­தி­களில் இருந்து கிட்­டத்­தட்ட 17 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள­னர்.

ஆனா­லும் கடந்த இரண்டு வாரங்­களில் கார்­கிவ் அருகே 23 பகு­தி­களை மீண்­டும் தாம் கைப்­பற்­றி­விட்­ட­தாக உக்­ரேன் கூறு­கிறது.

இதற்­கி­டையே, இந்­தப் போரின் கார­ண­மாக அனைத்­து­லக அள­வில் உணவு நெருக்­கடி ஏற்­படும் என்­றும் அது பல ஆண்­டு­க­ளுக்கு நீடிக்­கக்­கூ­டும் என்­றும் ஐநா எச்­ச­ரித்­துள்­ளது.

உக்­ரேன் துறை­மு­கங்­களை ர‌ஷ்யா மறித்­துள்­ள­தால் அங்­கி­ருந்து கோதுமை, சோளம், சமை­யல் எண்­ணெய் உள்­ளிட்ட உண­வுப் பொருள்­கள் ஏற்­று­ம­தி­யா­க­வில்லை.

இதன் கார­ண­மாக அவற்­றுக்­கான மாற்று உண­வுப் பொரு­ளின் விலை, உல­க­ள­வில் சென்ற ஆண்­டை­விட கிட்­டத்­தட்ட 30 விழுக்­காடு உயர்ந்­துள்­ள­தாக ஐநா சொன்­னது.

இத­னால் கிட்­டத்­தட்ட 250 மில்­லி­யன் பேர் பட்­டி­னி­யால் வாடும் நிலை ஏற்­படும் என்று கூறப்­ப­டு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!