முதலீடு செய்ய வேண்டிய நேரம்: பைடன்

முதலீடு செய்ய வேண்டிய நேரம்: பைடன்

2 mins read
42d827d7-bb88-49aa-afa7-a87c9d9d15ae
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமது முதல் ஆசியப் பயணத்தில் நேற்று தென்கொரியா சென்றார். அங்கு அவரை தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் வரவேற்றார். படம்: ராய்ட்டர்ஸ் -

வாஷிங்­டன்: அதி­க­ரித்து வரும் சீனா­வின் ஆதிக்­கம், உக்­ரேன் மீதான ரஷ்­யா­வின் படை­யெ­டுப்பு ஆகி­ய­வற்­றுக்கு இடை­யில் இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­திற்­கான அமெ­ரிக்­கா­வின் ஆதரவை வலுப்­படுத்­தும் நோக்­கில் தமது முதல் ஆசி­யப் பய­ணத்­தைத் தொடங்­கி­உள்ள அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் நேற்று மாலை தென்­கொரியா சென்று சேர்ந்­தார்.

இந்­தியா, அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, ஜப்­பான் ஆகிய நாடு­கள் அங்­கம் வகிக்­கும் 'குவாட்' எனும் நான்கு தரப்பு கூட்­ட­மைப்­பின் உச்­ச­நிலை சந்­திப்பு ஜப்­பா­னில் வரும் 24ஆம் தேதி நடை­பெற உள்­ளது.

இதில் பங்­கேற்­ப­தற்­காக அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் ஜப்­பான் செல்­கி­றார். அதற்கு முன்­ன­தாக நேற்று தென்­கொ­ரி­யா­வுக்­குச் சென்­றார் பைடன்.

அதன் பிறகு அவர் நேராக, சாம்­சங் எலக்ட்­ரா­னிக்ஸ் நிறு­வ­னத்­தின் குறை­க­டத்தி தொழிற்­சா­லைக்குச் சென்­றார். அங்கு தென்­கொ­ரி­யா­வின் புதிய அதி­பர் யூன் சுக் யோலைச் சந்­தித்­தார் பைடன்.

தென்கொரிய அதிபருடன் இணைந்து தொழிற்­சா­லை­யைப் பார்­வை­யிட்ட பிறகு பேசிய பைடன், அமெ­ரிக்­கா­வும் ஒரே­மா­தி­ரி­யான எண்­ணம் கொண்ட கூட்­டா­ளி­களும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் முத­லீடு செய்ய வேண்­டிய நேரம் இது என்று கூறி­னார்.

"இரு நாடு­க­ளுக்­கும் இடையே இருக்­கும் நெருங்­கிய பிணைப்பை இந்த ஆலை பிர­தி­ப­லிக்­கிறது," என்­றும் சொன்­னார்.

தென்­கொ­ரியா, அமெ­ரிக்க நிறு­வ­னங்­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் முத­லீடு செய்­வ­தற்­குச் சலு­கை­கள் வழங்­க­ப­ட­வேண்­டும் என்று பைட­னி­டம் தென்­கொ­ரிய அதி­பர் வலி­யு­றுத்­தி­னார்.

அமெ­ரிக்­கா­வின் டெக்­சா­ஸில் சாம்­சங் நிறு­வ­னத்­தின் 17 பில்­லி­யன் டாலர் மதிப்­பி­லான புதிய குறை­க­டத்தி உற்­பத்தி தொழிற்­சாலையை நிறு­வத் திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது.

பைட­னின் இந்­தப் பய­ணம் ஜப்­பா­னுக்­கும் தென்­கொ­ரி­யா­வுக்­கும் இடை­யி­லான உறவை மேம்­ப­டுத்­து­வ­தற்கு அழுத்­தம் கொடுக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.