தோக்கியோ: அடுத்த மாதம் முதல் ஜப்பானுக்குள் அனுமதிக்கப்படும் வெளிநாட்டினர் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஜப்பானுக்குள் வரும்போது, கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதிப் படுத்தும் சான்றிதழை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஜி-7 அமைப்பில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும்.

