பாலியல் குற்றச்சாட்டிற்கு எலான் மஸ்க் மறுப்பு

வாஷிங்­டன்: டெஸ்லா, ஸ்பேஸ்­எக்ஸ் ஆகிய நிறு­வ­னங்­க­ளின் உரிமையாளரான எலான் மஸ்க், விமான பணிப்­பெண்­ணுக்கு பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்­த­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு அவர் தனி விமா­னத்­தில் பறந்­த­போது அதில் இருந்த பணிப்­பெண்­ணி­டம் பாலி­யல் ரீதி­யாக தவ­றாக நடந்­து­கொண்­டார் என்­றும் அந்த தவறை மறைப்­ப­தற்­காக 2018ஆம் ஆண்டு எலான் மஸ்­கின் ஸ்பேஸ்­எக்ஸ் நிறு­வ­னம் மூலம் $250,000 தொகை கொடுக்­கப்­பட்­ட­தா­க­வும் பிஸி­னஸ் இன்­‌சை­டர் ஊடகம் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

விமா­னப் பணிப்­பெண்­ணின் பெயர் வெளி­யிட விரும்­பாத தோழி ஒரு­வர், இது­பற்றி கூறி­ய­தாக அச்­செய்தி கூறி­யது.

தம்­மீ­தான இந்­தக் குற்­றச்­சாட்டை மறுத்து டுவிட்­ட­ரில் கருத்து தெரி­வித்த மஸ்க், “நான் கருத்து சுதந்­தி­ரம் பற்றி பேசி வரு­கி­றேன். அதில் ஒரு­ ப­கு­தி­யாக பைடன் அர­சாங்­கத்­தை­யும் விமர்­சித்து வரு­கி­றேன். இத­னால் என்­மீது அர­சி­யல் ரீதி­யான தாகு­தல்­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளன. என்­மீது வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டில் உண்மை இல்லை.

“ஆனால் இந்த அவ­தூ­று­கள் எல்­லாம் சிறந்த எதிர்­காலத்­திற்­காக போரா­டு­வ­தில் இருந்­தும் பேச்சுரிமை சுதந்­தி­ரம் குறித்து பேசு­வ­தில் இருந்­தும் என்னை தடுக்க முடி­யாது,” என்று பதி­விட்­டுள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!