தொற்றுக்கு எதிரான போரில் முன்னேற்றம்: வடகொரியா

தொற்றுக்கு எதிரான போரில் முன்னேற்றம்: வடகொரியா

1 mins read
5b60e654-8bde-464c-affd-ce8938366cf8
-

சோல்: வட­கொ­ரி­யா­வில் கிட்­டத்­தட்ட 2 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோ­ருக்­குக் காய்ச்­சல் உள்ள நிலை­யில், கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போராட்­டத்­தில் நல்ல பலன் கிடைத்­து வ­ரு­வ­தாக அந்­நாடு தெரி­வித்­துள்­ளது.

வியா­ழக்­கி­ழமை நில­வ­ரப்­படி, அங்கு ஒட்­டு­மொத்­த­மாக 2.24 மில்­லி­யன் பேர் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டுள்ளதாகவும் 65 பேர் மாண்­டு­விட்­ட­தாகவும் கேசி­என்ஏ செய்தி கூறு­கிறது.

காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் எத்­தனை பேருக்­குத் தொற்று உள்ளது என்­பது கூறப்­ப­ட­வில்லை.

கிரு­மிப் பர­வ­லுக்கு மத்­தி­யில், விவ­சா­யம், தொழிற்­சா­லை­கள் தொடர்ந்து செயல்­ப­டு­வ­தா­க­வும் அச்­செய்தி சொன்­னது.

சுகா­தார கட்­ட­மைப்பு, வளங்­கள் உள்­ளிட்­ட­வற்­றில் பின்­தங்­கி­யுள்ள வட­கொ­ரியா மனி­தா­பி­மான நெருக்­ க­டியை எதிர்­கொள்­வ­தற்­கான வாய்ப்பு உள்ள நிலை­யி­லும் அனைத்­து­லக உத­வி­களை ஏற்க மறுத்து வரு­கிறது.

கிரு­மிப் பர­வ­லைச் சமா­ளிக்க உத­வு­வ­தாக அமெ­ரிக்­கா­வும் தென்­கொ­ரி­யா­வும் விடுத்த அழைப்­பிற்கு வட­கொ­ரி­யா­வி­டம் இருந்து எந்­தப் பதி­லும் இல்லை.

அதே­போல், கிரு­மிப் பர­வல் நில­வ­ரம் குறித்து தக­வல்­களை அளிக்­கு­மாறு உல­கச் சுகா­தார நிறு­வ­னம் கேட்­ட­தற்­கும் அத­னி­டம் இருந்து தக­வல் இல்லை.

இருப்­பி­னும் வட­கொ­ரியா, சீனா­வின் உத­வியை நாடி­யி­ருப்­ப­தற்­கான அறி­கு­றி­கள் தெரி­கின்­றன. ஆனால், அதை இரு­நா­டு­களும் உறுதி செய்­ய­வில்லை.

தொற்றைச் சமாளிப்பதற்கான மருத்­து­வப் பொருள்­க­ளைக் கொண்டு வரு­வ­தற்­காக சீனா­விற்கு வட­கொ­ரியா விமா­னச் சேவை­களை இயக்­கு­வ­தாக பெயர் வெளி­யி­டப்­ப­டாத தக­வல்­களை மேற்­கோள்­காட்டி தென்­கொ­ரியா செய்தி வெளி­யிட்டு உள்­ளது.