ஐரோப்பாவில் வரும் மாதங்களில் குரங்கம்மை சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா வட்டார இயக்குநர் எச்சரித்துள்ளார்.
கோடைக் காலத்தில் ஐரோப்பாவில் அதிக அளவில் விழாக்களும், ஒன்றுகூடல்களும் நடைபெறும் என்பதால், அதிகாமானோருக்கு அம்மை தொற்றும் அபாயம் இருப்பதாக அவர் கூறினார்.
பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் தலா ஒரு குரங்கம்மை சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் மூன்று பேருக்கும், ஸ்பெனில் ஏழு பேருக்கும், பிரிட்டனில் 20 பேருக்கும் அம்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் குரங்கம்மை பரவலாக இருக்கும் நைஜீரியாவுக்குப் பயணம் மேற்கொண்டதாகத் தெரிகிறது.
தற்போது உறுதிசெய்யப்படும் பல சம்பவங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களிடையே பரவிவருவதை சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கோணத்தில் உலக சுகாதார அமைப்பு அதன் விசாரணையைத் தொடங்கியுள்ளது.


