ரஷ்யா: மரியபோல் நகர் எங்கள் வசம்

மாஸ்கோ: உக்­ரே­னில் தங்­க­ளுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்­துள்­ள­தாகவும் துறை­முக நக­ரான மரி­ய­போல் முற்­றி­லும் தங்­கள்

வச­மாகிவிட்­ட­தா­க­வும் ரஷ்யா அறி­வித்­தது.

அந்த நகரைக் கிட்­டத்­தட்ட மூன்று மாத காலம் ரஷ்­யப்­ ப­டைகள் முற்­று­கை­யிட்டு இருந்­தன.

கடை­சி­யில் மரி­ய­போல் நக­ரம்

ஒன்­று­மில்­லா­மல் நாச­மாகி சீர­ழிந்து குப்பை­கூ­ளங்­க­ளா­கி­விட்­டது.

மரி­ய­போல் நக­ரைக் கைப்­பற்ற நடந்த மோத­லில் 20,000க்கும் மேற்­பட்ட குடி­மக்­கள் மாண்­டு­விட்­ட­தாக அஞ்­சப்­ப­டு­கிறது.

அந்த நக­ரில் இருக்­கும் அசோவ்ஸ்­டால் என்ற எஃ­கு­ ஆலை முற்­றி­லும் விடு­விக்­கப்பட்டுவிட்­ட­தா­க­வும் அந்த நக­ரம் முழு­வ­தும் ரஷ்யா வசம் வந்­து­விட்­ட­தா­க­வும் ரஷ்யத் தற்­காப்பு அமைச்­சர் செர்கி ஷோய்கு ரஷ்ய அதி­பர் புட்­டி­னி­டம் தெரி­வித்­த­தாக பேச்­சா­ளர் இகோர் கொனாஷ்ன்­கோவ் கூறி­னார்.

இருப்பினும், இதை உக்­ரேன் உட­ன­டி­யாக உறு­திப்­ப­டுத்­த­வில்லை.

அந்த ஆலை­யில் அடை­பட்டு இருந்த 2,439 உக்­ரே­னிய வீரர்­கள் சரண் அடைந்­து­விட்­ட­தாக ரஷ்ய அமைச்சு கூறி­ய­தாக ஆர்­ஐஏ நொவோஸ்டி என்ற ரஷ்ய செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது. சரண் அடைந்­த­வர்­களை ரஷ்­யர்­கள் கைது செய்தனர்.

அந்த ஆலை 11 சதுர கிலோ மீட்­டர் பரப்­பில் அமைந்­துள்­ளது. பல வாரங்­க­ளாக அங்கு மோதல் நடந்­து­ வந்­தது.

மரி­ய­போல் நகர் முற்­றிலும் ரஷ்யா வச­மாகி இருப்­பது அதி­பர் புட்­டி­னுக்­குப் பெரும் தெம்­பாகி இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­தச் சூழ­லில் உக்­ரே­னின் தென்­கி­ழக்கு டொன்­பாஸ் வட்­டா­ரத்­தில் கடை­சி­யாக எஞ்சி இருக்­கும் உக்­ரேன் பகு­தி­யான லுஹான்ஸ்க் என்ற பகு­தி­யைப் பிடிக்க ரஷ்யா தாக்­கு­தலை தீவி­ரப்­ப­டுத்தி இருப்­பதா­க­வும் நேற்று தக­வல்­கள் தெரி­வித்­தன.

இத­னி­டையே, உக்­ரே­னில் ரஷ்யப் ப­டை­கள் ஏற்­ப­டுத்தி இருக்­கும் நாச வேலை­க­ளுக்கு ஈடாக மாஸ்­கோ­வி­டம் இருந்து இழப்­பீடு பெறும் வகை­யில் தன் தோழமை நாடு­களு­டன் முறை­யான உடன்­பாடு செய்­து­கொள்ள விரும்­பு­வ­தாக உக்­ரேனிய அதி­பர் ஸெலென்ஸ்கி கூறி­னார். உக்­ரேனை முடிந்­த­வரை துடைத்து ஒழிக்க ரஷ்யா முடிவு செய்­து­விட்­டது என்று தெரி­வித்த அவர், அத்­த­கைய உடன்­பாடு இத்­த­கைய காரி­யங்­க­ளைச் செய்­யும் நாடு­க­ளுக்கு ஒரு பாட­மாக இருக்­கும் என்­ற­ார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!