அமெரிக்கா: நெருங்கிய தொடர்பு மூலம் குரங்கம்மை பரவக்கூடும்

நியூ­யார்க்: குரங்­கம்மை கார­ண­மாக உட­லில் சொறி ஏற்­பட்ட ஒரு­வ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தாலோ அல்­லது அவ­ரு­டன் பாலி­யல் உறவு கொண்­டாலோ

அந்­நோய் பர­வக்­கூ­டும் என்று அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த மூத்த சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நோய் விலங்­கு­க­ளி­லி­ருந்து மனி­தர்­க­ளுக்­குப் பர­வக்­கூ­டி­யது. பொது­வாக ஆப்­பி­ரிக்­கா­வில் குரங்­கம்மை பாதிப்பு அதி­க­மாக இருப்­ப­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

ஆனால் அமெ­ரிக்­கா­வில் குரங்­கம்­மை­யால் பாதிக்­கப்­பட்­டி­ருப்ப

வருக்­கும் ஆப்­பி­ரிக்­கா­வுக்­கும் எவ்­வித தொடர்­பும் இல்­லா­தது அமெ­ரிக்க அதி­கா­ரி­களை வியப்­பில் ஆழ்த்­தி­யுள்­ளது.

பொது­மக்­க­ளி­டையே குரங்­கம்மை பர­வும் அபா­யம் மிகக் குறை­வாக இருக்­கும்­போ­தி­லும் விழிப்புடன் இருக்­கும்­படி சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்கு நினை­வூட்­டப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சந்­தே­கம் எழுந்­தாலோ அல்­லது தேவை ஏற்­பட்­டாலோ மருத்­து­வ­மனை ஊழி­யர்­கள் உட­ன­டி­யாக முழுப் பாது­காப்பு ஆடை­களை

அணிந்­து­கொள்ள வேண்­டும்.

பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ரு­டன் படுக்கை, பல்­து­லக்க பயன்­ப­டுத்­தப்­படும் தூரிகை, ஆடை­கள் போன்­ற­வற்றை பகிர்ந்­து­கொண்­டால் நோய் பர­வும் அபா­யம் அதி­க­ரிப்­ப­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அண்­மைய நாள்­களில் ஐரோப்பா, வட அமெ­ரிக்கா ஆகிய இடங்­களில் குரங்­கம்மை நோயால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

பாதிக்­கப்­பட்­டோ­ரில் பெரும்­பா­லா­னோர் ஓரே பாலி­னச் சேர்க்­கை­யில் ஈடு­பட்ட ஆட­வர்­கள் என்று உலக சுகா­தார நிறுவனம் தெரி­வித்­துள்­ளது.

உல­கெங்­கும் பதி­னோரு நாடு­களில் கிட்டத்தட்ட 80 பேருக்கு குரங்­கம்மை நோய் தொற்று உண்­டாகி உள்­ளது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்­துள்ள உலக சுகா­தார நிறு­வ­னம் இன்­னும் தொற்­றா­ளர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று எச்­ச­ரித்­துள்­ளது.

பிரான்ஸ், பெல்­ஜி­யம், ஜெர்­மனி ஆகிய நாடு­களில் தலா ஒரு குரங்­கம்மை சம்­ப­வம் உறு­தி­செய்­யப்­

பட்­டுள்­ளது.

இத்­தா­லி­யில் மூன்று பேருக்­கும் ஸ்பெ­னில் ஏழு பேருக்­கும் பிரிட்­ட­னில் 20 பேருக்­கும் குரங்கம்மை

கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கிடையே, மேலும் பலருக்கு குரங்கம்மை பரவக்கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், உலகெங்கும் சுகாதாரத் துறையினர் விழிப்புடன் செயல்பட்டு வரு கின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!