சிங்கப்பூர் பயணிகள்: கட்டுப்பாடுகளை தளர்த்திய சீனா

சிங்கப்பூர் பயணிகள்: கட்டுப்பாடுகளை தளர்த்திய சீனா

1 mins read
6420812b-46f7-4b9b-9a7d-bdd296b582d1
-

பெய்ஜிங்: சீனாவுக்குச் செல்ல விரும்பும் வெளிநாட்டுப் பயணிகள் கொவிட்-19 பரிசோதனை விதிமுறைக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும்

இந்நிலையில், சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்பும் சிங்கப்பூர் பயணிகள் பயணத்துக்கு முன்பு செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளன.

பயண நாளுக்கு ஒரு வாரம் இருக்கும்போது பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறை ரத்து செய்யப்படுகிறது. ஆனால் இப்பயணிகள் ஏழு நாள்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.