முடக்கநிலை முடிவுக்கு வர காத்திருக்கும் ஷாங்காய் மக்கள்

முடக்கநிலை முடிவுக்கு வர காத்திருக்கும் ஷாங்காய் மக்கள்

1 mins read
be373a97-fc61-4e9e-aec8-d7371ab279b7
பல நாள்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்ததை அடுத்து, கிடைத்த புதிய சுதந்திரத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்த ஷாங்காய் மக்கள். படம்: இபிஏ -

ஷாங்காய்: கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க சீனாவின் ஷாங்காய் நகரில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அந்நகரம் கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்தி வருகிறது. ஷாங்காயில் கடைத்தொகுதிகள். மளிகைக் கடைகள் முதலியவை கட்டம் கட்டமாகத் திறக்கப்படுகின்றன. வீட்டைவிட்டு வெளியேற மேலும் பலருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் நேற்று முன்தின நிலவரப்படி மேலும் 868 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாகவும் ஷாங்காய் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரித்தனர்.

இந்நிலையில், ஷாங்காயின் மத்திய ஜின்கான் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இன்று முதல் செவ்வாய் வரை அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும். எனவே, செவ்வாய்க்கிழமை வரை அனைவரும் வெளியே வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வீட்டைவிட்டு வெளியேற அவர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்பட்டுள்ளது.