அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் தோக்கியோவில் நடக்கும் குவாட் அமைப்பு கூட்டத்தின்போது கடல் கண்காணிப்பு ஏற்பாடு பற்றி அறிவிக்கும்.
இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதைத் தடுக்க இந்தக் கண்காணிப்பு முறை பயன்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அந்த ஏற்பாடு, சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் உள்ள கண்காணிப்பு நிலையங்களுடன் இணைப்பை ஏற்படுத்தி இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து தென் பசிபிக் கடல்வரைப்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மீன் பிடிக்கப்படுவதைக் கண்காணிக்கும். இதற்கு அது துணைக் கோள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்.
ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் குழுமத்தின் கூட்டம் தோக்கியோவில் நடைபெறுகிறது.
அதில் அமெரிக்க அதிபர் பைடன், இந்தியப் பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர், ஜப்பானியப் பிரதமர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். சீனாவின் கெடுபிடி போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்த நாடுகள் தங்களுக்கு இடையில் ஒத்துழைப்பை அதிகப்படுத்தி இருக்கின்றன.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக மீன் பிடிக்கப்படும் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் திட்டங்கள் பற்றி அமெரிக்கா விரைவில் அறிவிக்கும் என்று இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா-இந்தோ-பசிபிக் ஒருங் கிணைப்பாளரான குர்ட் கேம்ப்பெல் கூறியிருந்தார்.
இந்தோ பசிபிக் வட்டாரத்தைச் சேர்ந்த பல நாடுகள் சீனாவின் மீன்பிடி கலன்களால் தங்களுக்கு பல தொல்லைகள் ஏற்படுவதாக கூறி வருகின்றன.

