பருவநிலை மாற்ற பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய பிரதமர் உறுதி

பருவநிலை மாற்ற பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய பிரதமர் உறுதி

2 mins read
485bea42-9828-46be-a576-7f050ae0e0c2
தேர்தல் வெற்றிக்குப் பிறகு தொழிற் கட்சி வேட்பாளர்கள் ரித், சாலி சிதோவ் (வலது), ஆதரவாளர் களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் ஆண்டனி அல்பனிஸ் தம்படம் எடுத்தார். படம்: ஏஎஃப்பி -

பெரும்பான்மை வெற்றியை நோக்கி ஆஸ்திரேலிய தொழிற் கட்சி

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் புதிய பிர­த­ம­ராக பொறுப்­பேற்­க­வி­ருக்­கும் ஆண்­ட­னி­ அல்பனிஸ், உலக நாடு­க­ளு­ட­னான ஆஸ்­தி­ரே­லி­யா­வின் உற­வு­களைச் சீரமைக்க போவ­தா­க­வும் பருவநிலை மாற்­றத்­தைக் கையாள்­வதில் பின்­தங்­கி­யுள்ள நாடு என்ற பெயரை மாற்­று­வேன் என்­றும் உறுதி கூறி­யுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் நடந்த ஆஸ்­தி­ரே­லி­யத் தேர்­தல், அங்கு கடந்த பத்­தாண்­டு­க­ளாக நீடித்த லிபரல் கட்­சி­யின் ஆட்­சியை முடி­வுக்­குக் கொண்டு வந்­தது.

ஆண்­டனி அல்பனிஸ் தலை­மை­யி­லான தொழி­ற் கட்சி நேற்று மாலை நில­வ­ரப்­படி 71 இடங்­களை வென்­றுள்­ள­தா­கத் தெரி­கிறது. மேலும் பல இடங்­களில் அக்­கட்சி முன்­னி­லை­யில் உள்­ளது. எனவே, பெரும்­பான்­மைக்­குத் தேவை­யான 76 இடங்­கள் அக்­கட்­சிக்­குக் கிடைத்­து­வி­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

ஸ்காட் மோரி­சன் தலை­மை­யி­லான கூட்­டணி 50 இடங்­களில் வெற்றி பெற்­றுள்­ளது.

உலக நாடு­க­ளின் தலை­வர்­கள் வெற்றி பெற்ற அல்பனி­சிற்கு வாழ்த்து­க­ளைத் தெரி­வித்­த­னர்.

முக்­கிய அமைச்­சர்­க­ளு­டன் அல்பனிஸ் தலை­மை­யி­லான புதிய அமைச்­ச­ரவை இன்று பத­வி­யேற்­கக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது. இதற்­கி­டையே, தோக்­கி­யோ­வில் நடை­பெ­ற­வுள்ள குவாட் நாடு­களின் உச்­ச­நிலை மாநாட்­டில் கலந்து­கொள்ள அல்பனிஸ் ஜப்­பான் செல்­ல­வுள்­ளார். மாநாட்­டிற்­குப் பிறகு அமெ­ரிக்க அதி­பர், இந்­தி­யப் பிர­த­மர், ஜப்­பானியப் பிர­த­மர் ஆகி­யோ­ரு­டன் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை மேற்கொள்வார்.

இந்­நி­லை­யில் பேசிய ஆண்­டனி அல்­ப­னீஸ், "நம் நாட்­டில் அர­சி­யல் செயல்­பாட்டு முறையை மாற்ற விரும்­பு­கி­றேன்," என்­றார்.

தற்­போ­தைய நிலை­யில் குவாட் மாநாடு மிக­வும் முக்­கி­ய­மா­னது என்ற அவர், "வெளி­நாட்டு பங்­கா­ளி­கள் நம்­மி­டம் பெரும் மாற்­றங்­களை எதிர்­பார்க்­க­லாம். குறிப்­பாக, பருவநிலை மாற்­றம், அத­னு­டன் தொடர்­பு­டைய பிரச்­சி­னை­களில் நம்­மு­டைய போக்­கில் மாற்­றம் அவ­சி­யம்," என்­றார்.

ஆஸ்­தி­ரே­லி­யாவை எரி­சக்­தி­யில் வல்­ல­ரசு நாடாக உரு­வாக்க தாம் பாடு­படப் போவ­தா­க­வும் அவர் சொன்­னார்.