இலங்கையில் மருத்துவ தட்டுப்பாடு: மரணங்கள் அதிகரிக்கும் அபாயம்

இலங்கையில் மருத்துவ தட்டுப்பாடு: மரணங்கள் அதிகரிக்கும் அபாயம்

1 mins read
9ca4da8e-e777-4132-abf0-c712903de008
படம்: ஏஃபி -

இலங்கையில் பொருளில் நெருக்கடியால் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல உயிர்க்காக்கும் அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால், பல நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான மருந்துகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

அந்­நிய செலா­வ­ணிக் கையிருப்பு குறைந்துவருவதால், உயிர்க்காக்கும் மருந்துகளை வாங்க இயலவில்லை. நாட்டின் சுகாதார முறை முடக்கியுள்ளது.

தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பரிசோதனைகளும், சிகிச்சைகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அந்த மருத்தவமனையின் தலைமை மருத்துவர் தெரிவித்தார். நிலைமை மேம்படவில்லையென்றால், பல நோயாளிகள் உயிரிழக்கக்கூடும் என அவர் எச்சரித்தார்.

மருந்து பட்டியலில் கிட்டத்தட்ட 180 பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் மருந்து வழங்க முன்வந்துள்ளதாக அவர் கூறினார். ஆனால் அவை இலங்கையை வந்தடைய நான்கு மாதங்கள் பிடிக்கும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் மருந்துகளைத் தனிப்பட்ட முறையில் நன்கொடை வழங்க முன்வருமாறு உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் உள்ள இலங்கை மக்களை இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.