தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொற்றுநோய் சூழ்நிலையில் அதிகமான கோடீஸ்வரர்கள் உருவாகினர்

1 mins read
e0eb5554-2ee7-4f63-9969-635e0b28e325
உணவு, எரிசக்தி ஆகிய துறைகளில் அதிகமான செல்வந்தர்கள் உருவாகினர். (படம்: ஏஃபி) -

கொவிட்-19 சூழ்நிலையில் ஒவ்வொரு 30 மணி நேரத்துக்கு ஒரு கோடீஸ்வரர் உருவானதாக ஆக்ஸ்ஃபாம் அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில் 573 பேர் பில்லியன் கணக்கான சொத்துக்களைச் சேர்த்ததாகக் கூறப்பட்டது.

அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடந்த பல ஆண்டுகளைவிட இந்த ஈராண்டுகளில் கிடுகிடு என உயர்ந்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டது. இந்நிலையில் உணவு, எரிசக்தி ஆகிய துறைகளில் உள்ளவர்கள் ஒவ்வொரு இரண்டு நாள்களுக்குத் தங்கள் சொத்து மதிப்பை ஒரு பில்லியனாக அதிகரித்ததாகக் குறிப்பிடப்பட்டது.

கொவிட்-19 கிருமித் தொற்று ஏற்பட்ட முதல் 24 மாதங்களில் செல்வந்தர்களின் சொத்து 23 ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு 263 பேர் கடும் வறுமையில் தள்ளப்படுவர் என அறிக்கை கூறுகிறது.