மணிலா: அதிவேக பிலிப்பீன்ஸ் படகு ஒன்று திடீரென தீப்பிடித்துக் கொண்டதில் எழுவர் உயிரிழந்தனர். ஏழு பயணிகளை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை என்று கட லோரக் காவல்படை தெரிவித்து உள்ளது.
தலைநகர் மணிலாவிலிருந்து கிழக்கே ஏறக்குறைய 60 கிலோ மீட்டர் (37 மைல்) தொலைவில் உள்ள கியூசான் மாநிலத்தின் ரியல் துறைமுகத்தை அடைவதற்கு முன்பாக இந்த விபத்து நேர்ந்தது.
134 பேருடன் சென்று கொண்டி ருந்த படகில் இருந்து 120 பயணி கள் மீட்கப்பட்டனர். அவர்களில் 23 பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றதாக கடலோரக் காவல்படை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"படகில் 134 போ் பயணம் செய்துகொண்டிருந்தபோது திடீரென படகு தீ பற்றி எரிந்தது. பலா் உயிர் தப்பிப்பதற்காக கடலில் குதித்தனா். இவ்விபத்தில் ஐந்து பெண்கள், இரண்டு ஆண்கள் என எழுவர் உயிாிழந்தனா். தீ விபத் துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை," என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
துறைமுக அதிகாரிகள் படகில் இருந்தவா்களை மற்றொரு படகு முலம் மீட்டு கரைக்கு கொண்டு சென்றனா். மயக்கமடைந்தவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அவர்கள் அவசர சிகிச்சை வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இன்னும் எழுவரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். படம்:ஏஎஃப்பி

