ஜப்பானில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு புதிய பொருளியல் மன்றம் பிரதமர் லீ: பொருளியல் மன்றம் திறந்த அமைப்பாக, அனைவரையும் உள்ளடக்கி இருக்கவேண்டும்

ஜப்பானில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு புதிய பொருளியல் மன்றம் பிரதமர் லீ: பொருளியல் மன்றம் திறந்த அமைப்பாக, அனைவரையும் உள்ளடக்கி இருக்கவேண்டும்

3 mins read
315718fb-87e3-402d-b07b-f5f3e8630f9d
-

தோக்­கியோ: ஜப்­பான் சென்­றுள்ள அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் அங்கு புதிய இந்தோ-பசி­பிக் பொரு­ளி­யல் மன்­றம் என்ற அமைப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார். இதில் இந்­தியா, ஜப்­பான் உள்­ளிட்ட 13 நாடு­கள் அங்­கம் வகிக்­கும் என்­றும் திரு பைடன் தெரி­வித்­துள்­ளார்.

'ஐபி­இ­எஃப்' எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்த அமைப்பை திரு பைடன் தமது ஜப்­பா­னி­யப் பய­ணத்­தின் இரண்­டா­வது நாளான நேற்று ஜப்­பா­னி­யப் பிர­த­மர் திரு ஃபூமியோ கிஷி­டா­வு­டன் நடத்­திய பேச்­சு­வார்த்­தைக்­குப் பின் அறி­வித்­தார்.

பின்­னர், குவாட் எனப்­படும் இவ்­வட்­டாரப் பாது­காப்பு அமைப்­பில் கலந்­து­கொண்ட திரு பைடன், "இந்த 21ஆம் நூற்­றாண்­டில் நடை­பெ­றும் போட்­டி­யில் நாம் ஒன்­றி­ணைந்து வெற்றிபெறு­வோம் என்ற நம்­பிக்கை உள்­ளது," என்று புதிய பொரு­ளி­யல் மன்ற அறி­விப்­பின் போது கூறி­னார்.

இந்­தப் புதிய பொரு­ளி­யல் மன்ற அறி­விப்­பில் அதி­பர் பைடன், இந்­தி­யப் பிர­த­மர் மோடி, ஜப்­பா­னி­யப் பிர­த­மர் திரு கிஷிடா ஆகி­யோர் நேரில் கலந்­து­கொண்­ட­னர். இந்த மன்­றத்­தின் மற்ற உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­கள் மெய்­நி­க­ரா­கக் கலந்­து­கொண்­ட­தாக ஏஎ­ஃப்பி செய்­தித் தக­வல் கூறு­கிறது.

"இந்த 21ஆம் நூற்­றாண்­டில் பொரு­ளி­யல் போட்­டித்­தன்­மையை உறு­தி­செய்­யும் பொருட்டு அதில் அடங்­கி­யுள்ள முக்­கிய சவால்­களை எதிர்­கொள்­ளும் வகை­யில் இவ்­வட்­டா­ரத்­தின் நமது அணுக்க நண்­பர்­கள், பங்­கா­ளி­கள் ஆகி­யோ­ரு­டன் ஒத்­து­ழைக்க மேற்­கொண்­டுள்ள கடப்­பா­டு­தான் இந்த பெரு­ளி­யல் மன்­றம்," என்று திரு பைடன் விளக்­கி­னார்.

மற்ற வர்த்­தக அமைப்­பு­க­ளைப் போல், இந்­தப் பொரு­ளி­யல் அமைப்­பின் உறுப்­பி­னர்­கள் வரி­கள் குறித்தோ சந்­தை­களை எளி­மை­ப் ப­டுத்­து­வது பற்­றியோ பேச்­சு­வார்த்­தை­யில் ஈடு­படமாட்­டார்­கள் என்று கூறிய அமெ­ரிக்க அதி­பர், மாறாக, இந்த அமைப்பு நாடு­கள் மின்­னி­லக்கப் பொரு­ளி­யல், விநி­யோ­கத் தொடர், தூய எரி­சக்தி கட்­ட­மைப்பு, ஊழ­லுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­கள் ஆகிய நான்கு முக்­கிய அம்­சங்­களில் பொது­வாக ஏற்­பு­டைய தர­நி­லை­களில் உறுப்பு நாடு­கள் கவ­னம் செலுத்­தும் என்று தெரி­வித்­தார்.

இந்த அமைப்­பில் அமெ­ரிக்­கா­வு­டன், இந்­தியா, ஜப்­பான், ஆஸ்­தி­ரே­லியா, இந்­தோ­னீ­சியா, புருணை, நியூ­சி­லாந்து, பிலிப்­பீன்ஸ், சிங்­கப்­பூர், மலே­சியா, தென்­கொரியா, தாய்­லாந்து, வியட்­னாம் போன்ற நாடுகளும் இடம்பெற்­று உள்­ளன.

"வெளிப்­ப­டை­யான, திறந்த, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய, மீள்­தி­றன்­மிக்க, பாது­காப்­பான, வள­மான இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் நாங்­கள் கடப்­பாடு கொண்­டுள்­ளோம்," என்று இந்த நாடு­களின் கூட்­ட­றிக்கை தெளி­வு­படுத்தியது.

ஜப்பானில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்படுத்திய புதிய இந்தோ-பசிபிக் பொருளியல் மன்றம் திறந்த அமைப்பாக, அனைவரையும் உள்ளடக்கியதாக, நீக்குப்போக்கான ஒன்றாக இருக்க வேண்டும் என்று அந்த மன்றத்தின் அறிவிப்பு நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு பேசிய பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த அமைப்பு அதன் உறுப்பு நாடுகள் பங்காளிகளாக தொடர ஏதுவாக பல்வேறு நாடுகளுக்கு இடையிலான வேறுபட்ட ஒத்துழைப்பு சூழலில் பங்கேற்கும் விதமாக அமைந்திருக்கவேண்டும் என்று பிரதமர் கூறினார். மேலும், மற்ற நாடுகள் அந்த அமைப்பில் உறுப்பினர்களாகச் சேர தயார்நிலையில் இருக்கும்போது, அவர்களைச் சேர்த்துக் கொள்ள வழிவகுக்கவேண்டும் என்றும் திரு லீ விளக்கினார்.

இந்த நிகழ்வில் மெய்நிகர் வழியாகக் கலந்துகொண்ட பிரதமர், "ஐபிஇஎஃப் அமைப்பை சிங்கப்பூர் வரவேற்கிறது. திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய சட்டம், விதிமுறைகளின் அடிப்படையில் இயங்கி நிலைத்தன்மை, பாதுகாப்பு, வளம் ஆகியவற்றை உறுதிசெய்யும் அமைப்பை நாங்கள் என்றுமே வரவேற்றுள்ளோம்," என்று திரு லீ தெரிவித்தார்.