ஆஸ்திரேலிய அரசியலில் இரு மலேசியர்கள்

பெட்­டா­லிங் ெஜயா: அண்­மை­யில் நடை­பெற்ற ஆஸ்­தி­ரே­லிய தேர்­த­லில் மலே­சி­யர்­கள் இரு­வர் வெற்றி பெற்று சாதனை படைத்­துள்­ள­னர்.

இதில் மூத்த அர­சி­யல்­வா­தி­யான திரு­வாட்டி பென்னி வோங் அந்­நாட்­டில் ஆண்­டனி லெப­னிஸ் தலை­மை­யி­லான தொழிற்கட்சி அர­சில் வெளி­யு­றவு அமைச்­ச­ரா­கப் பதவி ஏற்­றி­ருப்­பது குறிப்­பி­டத்தக்கது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் அடிலெய்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கலை­கள் மற்­றும் சட்­டக் கல்வி கற்ற திரு­வாட்டி பென்னி வோங் சாபா மாநி­லத்­தின் கோத்தாகினபா­லு­வில் பிறந்­த­வர். இவர் எட்டு வயது சிறு­மி­யாக இருக்­கும்­போது தமது தாயா­ரு­டன் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு குடி­பெ­யர்ந்­தார்.

மலே­சி­யா­வின் புகழ்­பெற்ற கட்­ட­டக் கலை நிபு­ண­ரான திரு ஃபிரான்­சிஸ் வோங்­கின் மக­ளா­வார் திரு­வாட்டி பென்னி.

மலே­சி­யா­வின் த ஸ்டார் செய்­தித்­தா­ளுக்கு 2007ஆம் ஆண்டு பேட்டி அளித்த திரு ஓங், தமது மகள் நினைத்­ததை செய்து முடிப்­ப­வர் என்­றும் அவர் அர­சி­யல்­வா­தி­யாக உரு­வெ­டுப்­பார் எனத் தாம் நினைக்­க­வில்லை என்­றும் கூறி­னார்.

"அவர் ஒரு மருத்­து­வ­ராக வர­வேண்­டும் என நான் விரும்­பி­னேன். அவ­ரும் முத­லில் மருத்­து­வக் கல்­விக்கு பதிந்­து­விட்டு பின்­னர், மாண­வர் பரி­மாற்­றத் திட்­ட­மாக பிரே­சில் சென்று அங்கு மக்­க­ளுக்கு உதவி தேவை­யாய் இருப்­ப­தைக் கண்டு, சட்­டக் கல்­விக்கு மாறி­னார்," என்று திரு வோங் விளக்­கி­னார்.

இதற்­கி­டையே, மலே­சி­யா­வைச் சேர்ந்த 60 வயது திரு சேம் லிம், மேற்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வின் டேங்னி தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தேர்­வு­பெற்­றுள்­ளார்.

ஜோகூ­ரில் பிறந்த இவர் காவல்­துறை அதி­கா­ரி­யாக பல இன சமு­தா­யங்­களில் சிறப்­பாக பணி­பு­ரிந்த ­த­ற்காக விருது பெற்­றார்.

இவர் தேர்­த­லில் முன்­னாள் பிர­த­மர் திரு ஸ்காட் மோரி­ச­னின் ஆலோ­ச­க­ரான திரு பென் மோர்ட்­டன் என்­ப­வ­ரைத் தேர்­த­லில் தோற்­க­டித்து பல­ரை­யும் ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!