ரஷ்யாவிலிருந்து வெளியேறும் ஸ்டார்பக்ஸ்

ரஷ்யாவிலிருந்து வெளியேறும் ஸ்டார்பக்ஸ்

1 mins read
a6660710-f5e0-46f4-867b-4a71cfada309
மாஸ்கோவில் மூடப்பட்ட ஸ்டார்பக்ஸ் உணவகம். கோப்புப் படம்: ஏஎஃப்பி -

ரஷ்யாவில் உள்ள தனது அனைத்து 130 உணவகங்களையும் மூடப்போவதாக ஸ்டார்பக்ஸ் தெரிவித்துள்ளது.

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து அந்நிறுவனம் ரஷ்யாவில் இயங்குவதைக் கடந்த மார்ச் மாதம் தற்காலிகமாக நிறுத்தியது.

இப்போது ரஷ்யாவில் இயங்குவதை நிரந்தரமாக நிறுத்தப்போவதாக அமெரிக்க நிறுவனமான ஸ்டார்பக்ஸ் அறிவித்துள்ளது.

மற்றொரு பெரிய அமெரிக்க உணவக நிறுவனமான மெக்டானல்ட்ஸ், இனி ரஷ்யாவில் இயங்கப் போவதில்லை என்று சென்ற வாரம் தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து ஸ்டார்பக்சின் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

உக்ரேன் போர் காரணமாக ரஷ்யாவுடனான தொடர்பைத் துண்டித்துக்கொள்ள அமெரிக்க நிறுவனங்கள் மீது நெருக்குதல் இருந்து வருகிறது.

ஸ்டார்பக்ஸ் கடந்த சுமார் 15 ஆண்டுகளாக ரஷ்யாவில் செயல்பட்டு வந்தது.