கழிவறையில் இருந்தபோது ஓர் ஆடவரை மலைப்பாம்பு ஒன்று கடித்தது.
கழிவறையில் இருந்தபோது கைபேசியில் விளையாடிக் கொண்டிருந்தபோழ அந்த ஆடவர் தாக்கப்பட்டார்.
கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று இச்சம்பவம் நிகழ்ந்தது.
தாக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகும் பாதிக்கப்பட்ட 28 வயது சப்ரி டஸாலியின் உடலில் மலைப்பாம்பின் பற்களின் பாகங்கள் சிக்கியிருந்தது தெரியவந்தது.
தன்னைக் கடித்தபோது பாம்பை அடித்ததால் பற்கள் உடைந்து உடலில் சிக்கியிருக்கலாம் என்று திரு சப்ரி கூறினார்.
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் செலாயாங் பகுதியில் இருக்கும் அவரின் வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
இந்தச் சம்பவம் குறித்து திரு சப்ரி டுவிட்டரில் பதிவுசெய்திருந்தார்.
அந்தப் பதிவு மிகவும் பிரபலமாகி, பலரால் பகிரப்பட்டது.


