'குரங்கம்மைக்குத் தடுப்பூசி தேவையில்லை'

'குரங்கம்மைக்குத் தடுப்பூசி தேவையில்லை'

1 mins read
1788bae7-3caa-4849-871f-3b5dd43ea0a6
-

லண்டன்: குரங்கம்மை நோய் பரவலுக்கு தடுப்பூசி தேவையில்லை என்று தாம் கருதுவதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. சிறந்த சுகாதார பழக்கமும் பாதுகாப்பான தாம்பத்யமும் குரங்கம்மை பரவலைத் தடுக்கும் என்றும் அது சொன்னது.

நிறுவனத்தின் ஐரோப்பிய பிரிவில் அச்சுறுத்தல்மிக்க நோய்க் கிருமியை ஆராயும் குழுவை வழிநடத்தும் டாக்டர் ரிச்சர்ட் பெபாடி இவ்வாறு சொன்னார்.

குரங்கம்மைக்கு எதிராக ஜெய்னோஸ் எனும் தடுப்பூசியை வெளியிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் கூறியுள்ள நிலையில் சுகாதார நிறுவனம் இதனைக் கூறிஉள்ளது.

அம்மை, குரங்கம்மை ஆகியவற்றுக்கு எதிராக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

1,000த்திற்கும் மேற்பட்ட இத்தடுப்பூசி தங்களிடம் கையிருப்பு உள்ளதாகவும் அதன் தயாரிப்பை மேலும் அதிகரிக்கவுள்ளதாகவும் அமெரிக்கா சொன்னது.

குரங்கம்மை பரவலைக் கட்டுப்படுத்த தொடர்புத் தடமறிதல், தனிமைப்படுத்துதலே முதன்மை தேவை என்ற ரிச்சர்ட், இது மிகவும் எளிதாக பரவக்கூடியதாக இல்லை என்பதோடு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதையும் சுட்டினார்.

குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆண்களுக்கு இடையே தாம்பத்ய உறவு கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது.