கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது தைவான்

கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது தைவான்

1 mins read
c07c409e-e4ab-43fa-88a1-878591cb01d6
-

தைப்பே: நாளொன்றுக்கு 80,000 தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டாலும் தொற்றுக்கு மத்தியில் வாழும் வகையில், தைவான் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது.

"கிருமித்தொற்றை முற்றிலும் துடைத்தொழிக்கும் 'பூஜ்ஜிய' இலக்கை எங்களால் அடைய முடியவில்லை. ஏனெனில் கொவிட்-19 கிருமி வேகமாகப் பரவுகிறது," என்று முன்னாள் துணை அதிபரும் தொற்றுநோயியல் நிபுணருமான சென் சியென்-ஜென் சொன்னார். தைவானில் 99.7% தொற்றுச் சம்பவங்கள் லேசான அறிகுறிகளோ அல்லது அறிகுறிகளற்றதாகவோ உள்ளன என்றார் அவர்.

இந்நிலையில், அனைத்துலக எல்லை கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை தைவான் நீக்கியுள்ளது.

கடைகள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவைச் செயல்படும். மக்கள் ஒன்றுகூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முகக்கவசம் கட்டாயம்.

75 முதல் 80 விழுக்காட்டு மக்கள் 3வது தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, சுற்றுலாப் பயணி களுக்கு எல்லை திறக்கப்படும் என்று அவர் கூறினார்.