இந்தியா, பாகிஸ்தானில் 30 மடங்கு அதிக வெப்ப அலை

இந்தியா, பாகிஸ்தானில் 30 மடங்கு அதிக வெப்ப அலை

1 mins read
6ba1a411-6e95-4f08-9768-47637db4fc00
புவிவெப்பமயமாதல் காரணமாக கடுமையான வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படுவதாக ஆய்வு கூறுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

புதுடெல்லி: தென்கிழக்காசிய நாடுகளான இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெப்ப அலை முன்கூட்டியே தொடங்கி, நீண்ட காலத்திற்கு நீடிப்பதற்குப் பருவநிலை மாற்றமே காரணம் என்று உலக வானிலை கூட்டமைப்பின் ஆய்வு கூறுகிறது.

புவிவெப்பமயமாதல் தொடர்ந்து நிகழ்ந்துவருவதால், கடுமையான வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அந்த வகையில் முன்பைவிட 30 மடங்கு அதிகமான வெப்ப அலைகள் வீசுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

பருவநிலையில் மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர், இதுபோன்ற வெப்ப அலைகள் பொதுவாக 3,000 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஏற்பட்டன என்கிறது அந்த ஆய்வு.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கமான அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருந்தது. இது 122 ஆண்டுகளில் 3வது ஆக அதிக வெப்பநிலையாகும். பாகிஸ்தானின் ஜகோபாபாத் நகரத்தில் மே 14ஆம் தேதி 51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெப்ப அலை காரணமாக இவ்வாண்டு 90 பேர் மாண்டுவிட்டனர்.