பெய்ஜிங்: பசிபிக் வட்டாரத்தில் அமைந்துள்ள சாலமன் தீவுகளுக்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இந்த வாரம் பயணம் செய்யவுள்ளார். அப்போது வர்த்தக உடன்பாடுகள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கம் குறித்து அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் அக்கறைக் காட்டத் தொடங்கியுள்ள நேரத்தில் இந்தப் பயணம் அமைகிறது.
அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் கவலை தரும் விதமாக, இரு நாடுகளும் கடந்த மாதம் விரிவான பாதுகாப்பு உடன்பாட்டைச் செய்துகொண்டன.

