துப்பாக்கிச் சட்டங்களைக் கடுமையாக்க பைடன் அழைப்பு

துப்பாக்கிச் சட்டங்களைக் கடுமையாக்க பைடன் அழைப்பு

1 mins read
565cfc8f-8f52-4ec3-b165-ad145dbe867b
டெக்சஸின் உவால்டி நகரில் உள்ள ரோப் தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் மாண்டதை அடுத்து, உவால்டி டவுன் சதுக்கத்தில் நடத்தப்பட்ட பிரார்த்தனை கூட்டத்தில் தங்கள் துயரத்தை வெளிப்படுத்திய மக்கள்.படம்: ராய்ட்டர்ஸ் -

டெக்­சஸ்: மாண­வர்­க­ளை பலி­வாங்­கிய டெக்சஸ் பள்­ளித் துப்­பாக்­கிச் சூடு குறித்து வேதனை தெரி­வித்­துள்ள அமெ­ரிக்க அதி­பர் பைடன் அந்­நாட்­டின் துப்­பாக்­கிக் கொள்­கைக்கு எதி­ராக மக்­கள் குரல் கொடுக்­க­வேண்­டும் என்று கூறி­யுள்­ளார்.

இது­பற்றி பேசிய அவர், "இது­போன்ற துப்­பாக்­கிச்சூட்டு சம்பவங்கள் உல­கின் மற்ற பகு­தி­களில் அரி­தா­கவே நடக்­கின்­றன. ஆனால் நாம் இதனை ஏன் மிக சாதா­ர­ண­மா­கக் கடந்து செல்­கிறோம். துப்­பாக்­கிக் கலா­சா­ரத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டிய நேரம் வந்­து­விட்­டது.

"துப்­பாக்­கிச் சட்­டத்­தில் மாற்­றம் கொண்டு வர காங்­கி­ரஸ் உறுப்­பி­னர்­க­ளுக்கு அமெ­ரிக்­கர்­கள் அழுத்­தம் கொடுக்க வேண்­டும்.

"தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மக்­கள் பிர­தி­நி­தி­கள் அனை­வ­ரும் நிலை­மையைப் புரிந்துகொள்ள வேண்­டும்," என்­றார்.

எந்தக் காரணமும் இல்லாமல், யார் வேண்­டு­மா­னா­லும் துப்­பாக்கி வைத்­தி­ருக்க உத­வு­கிறது அமெ­ரிக்­கா­வின் தற்­போ­தைய துப்­பாக்­கிச் சட்­டம். அமெ­ரிக்காவில் கடந்த ஆண்டு 61 துப்­பாக்­கிச்சூட்டு சம்­ப­வங்­கள் நடந்­துள்­ளன. இது அதற்கு முந்­தைய ஆண்­டை­விட 52 விழுக்காடு அதி­கம் என்­பது மட்­டு­மல்­லா­மல், கடந்த 20 ஆண்­டு­களில் அதி­க­பட்ச எண்­ணிக்கை என்­றும் குற்­றப் புல­னாய்­வுத் துறை தெரி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்­கா­வின் துப்­பாக்­கிச் சட்­டத்­தில் கட்­டுப்­பா­டு­கள் கொண்டு வர வேண்­டும் என­வும் இது போன்ற நிகழ்­வு­கள் மீண்­டும் நிக­ழா­மல் தடுக்­க­வேண்­டும் என­வும் துணை அதி­பர் கமலா ஹாரிஸ் கூறி­உள்ளார்.