பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்து மீண்டும் தோ்தல் நடத்த வலியுறுத்தி, பேரணி நடத்தப்படும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த சனிக்கிழமை அறிவித்தாா். ஆனால் இது வன்முறைக்கு வழிவகுக்கும் எனக் கூறி அரசு நேற்று நடைபெறவிருந்த பேரணிக்குத் தடை விதித்தது. முன்னெச்சரிக்கையாக இம்ரான் ஆதரவாளர்கள் 100 பேர் கைதாகினர். இஸ்லாமாபாத்திற்குச் செல்லும் அனைத்து
சாலைகளும் நேற்று மூடப்பட்டிருந்தன. இம்ரான் கானின் ஆதரவாளர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர்
லத்தியால் அடித்தனர். படம்: ஏஎஃப்பி

