தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செல்சி குழுவை அமெரிக்கருக்கு விற்க இங்கிலாந்து ஒப்புதல்

1 mins read
a6baeb8c-1e1a-43ef-ad0e-11d72d82e23c
-

லண்­டன்: தடை விதிக்­கப்­பட்­டுள்ள ர‌ஷ்­ய­ரான ரோமன் அப்­ர­மோ­விச்­சி­டம் இருந்து செல்சி காற்­பந்­துக் குழுவை டோட் போஹ்லி வாங்­கு­வ­தற்கு இங்­கி­லாந்து அர­சாங்­கம் ஒப்­பு­தல் தெரி­வித்­துள்­ளது.

4.25 பில்­லி­யன் பவுண்­டுக்கு (S$7.33 பில்­லி­யன்) விற்க ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக புளூம்­பெர்க் செய்தி வெளி­யிட்­டது.

பேஸ்­பால் விளை­யாட்­டுக்­கான மேஜர் லீக் தொட­ரில் விளை­யா­டும் லாஸ் ஏஞ்­சலிஸ் டோட்­ஜர்ஸ் குழு­வின் இணை உரி­மை­யா­ள­ராக இருக்கிறார் செல்சியை வாங்­கும் அமெ­ரிக்க­ரான டோட் போஹ்லி.

இதை­ய­டுத்து இங்­கி­லி‌ஷ் பிரி­மி­யர் லீக்­கில் போட்­டி­யி­டும் 20 குழுக்­களில் பாதிக்­கும் மேற்­பட்­ட­வற்றை அமெரிக்கர்கள் வாங்கி இருக்கிறார்கள்.

குறிப்­பாக லீக்கின் ஆறு முன்­னணி குழுக்­களில், ஆர்­ச­னல், செல்சி, லிவர்­பூல், மான்­செஸ்­டர் யுனை­டெட் ஆகிய நான்கு குழுக்­கள் அமெ­ரிக்­கர்­க­ளுக்­குச் சொந்­த­மா­ன­தாக இருக்­கும்.

"இந்த விற்­ப­னை மூலம் கிடைக்­கும் கிடைக்­கும் வரு­மா­னம் அப்­ர­மோ­விச்சிற்குப் பய­ன­ளிக்­காது. இந்த வரு­மா­னம் உக்­ரேன் போரில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உத­வப் பயன்­ப­டுத்­தப்­படும்," என்றார் மின்­னி­லக்க, கலா­சார, ஊடக, விளை­யாட்­டுக்­கான வெளி­யு­ற­வுத்­துறை செய­லா­ளர் நாடின் டோரிஸ்.

உக்­ரே­னில் ர‌ஷ்யா படை­யெடுத்­த­தற்­குப் பிறகு, மேற்­கத்­திய நாடு­கள் ர‌ஷ்­யா­மீது பொரு­ளா­தார தடை­களைக் கொண்டு வந்­தன. அந்த வகை­யில் ர‌ஷ்­ய­ரான அப்­ர­மோ­விச்­சிற்­கும் சென்ற மார்ச் மாதம் தடை விதிக்­கப்­பட்­ட­தால் செல்சி குழுவை­விட்டு அவர் வெளி­யேறினார்.

அப்­ர­மோ­விச், செல்சி குழு­வின் உரி­மை­யா­ள­ராக இருந்த 20 ஆண்­டுகளில், அக்­குழு 21 கிண்­ணங்­களை வென்­றது.