புத்ரஜயா: மலேசியாவின் தோட்ட, பொருள்கள் துறை அமைச்சர் ஸுரைய்டா கமாருதீன் தாம் பதவி விலகப் போவதாகக் கூறியுள்ளார்.
பெர்சத்து கட்சியில் இருந்து மாறி மலேசிய தேசிய கட்சியில் சேரப்போவதாக அவர் நேற்று அறிவித்தார். அமைச்சர் பதவியிலிருந்து விலகுவது பற்றி பிரதமர் இஸ்மாயில் சாப்ரியுடன் கலந்து ஆலோசிக்கப் போவதாக வும் அவர் கூறினார்.
அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சி களுக்கும் இடையிலான அரசியல் உத்தரவாத ஒப்பந்தம் ஜூலை 31ஆம் தேதி முடிவுக்கு வரும் நிலையில் இப்போது புதிய பொதுத் தேர்தலுக்கான சாத்தியம் கூடியுள்ளது.

